நகைச்சுவை துணுக்குகள் 27

அவர்: FDI வெளிநாட்டு நேரடி வர்த்தகம் வந்துடும் போல இருக்கே
இவர்: என்ன பண்ணப்போறீங்க?
அவர்: என்மனைவி வால்மார்ட்டுக்குப் போய் எல்லாம் வாங்குவா. நான் வீல் மார்ட்டுக்குப்போய் வேண்டியதை வாங்கிப்பேன்..
இவர்: வீல் மார்ட்டா? அது என்னங்க?
அவர்: அதான். நம்ம ஊரு தள்ளு வண்டிக்கடைங்க.
****************
ஹிஸ்டரி புரொஃபஸர் ஏன் தன் பதவியை ராஜினாமா செய்துட்டார்?

அதுலே எதிர்காலம் இல்லேன்னுட்டு ராஜினாமா செய்துட்டாராம்.

**************

காத்தவராயன்துணை
உக்கிர மகா காளி அம்மன்துணை
அறுவை சிகிச்சை அறிவிப்புப் பத்திரிகை
நிகழும் நந்தன வருஷம் தை மாதம் , 5ம்தேதி வெள்ளிக்கிழமை, ( 18.1. 2013) ரேவதி நட்சத்திரம், மகர லக்னம், அமிர்த யோகம், கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 6:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள்,
கிருஷ்ணசாமியின் பேரனும், எனது தம்பி ராமமூர்த்தியின் மகனுமான புவனேஸ்வரன் என்ற பூபதிக்கு அறுவை சிகிச்சை செய்வதாய் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு
மேற்படி அறுவை சிகிச்சை
அருளானந்த சிவாமியின் ஆசியுடனும், டாக்டர் எம். தர்மராஜனின் தயவுடனும், மோட்சம் ஆபரேஷன் தியேட்டர், சாகர் மருத்துவ மனை, சிமெட்டரி சாலை, கைலாசபுரத்தில் நடக்கிறபடியால் தாங்கள் தங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து தங்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே உங்களின் பிரார்த்தனைகளையும், நல்லாசிகளையும் அறுவையாளனுக்கு அளித்து எங்களை தைரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் ,
இப்படிக்கு . யானும் அவ்வண்ணமே கோருகிறேன்
ஆனந்தன். டாக்டர் எம். தர்மராஜன்
**************
பஃப்ரிட்ஜாலே ஓஸோன் படலத்தைலே ஓட்டை விழுதாம்

ஓஸோன் படலத்துலே ஓட்டை விழுதோ இல்லையோ, இப்ப நான்ஃப்ரிட்ஜ் வாங்கினா என் பட்ஜெட்டைலே பெரிய ஓட்டை விழும்

எழுதியவர் : ரா.குருசுவாமி(ராகு) (16-Oct-20, 7:52 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 82

மேலே