நகைச்சுவை துணுக்குகள் 26

எங்க குடும்பத்துலே சொந்தத்துலேதான் கட்டிக்கிற வழக்கம்.

அப்படியா?

ஆமாம் எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அதேமாதிரி எங்க தாத்தா பாட்டியைத்தான் கட்டிக்கிட்டாரு. என்அண்ணன் என்அண்ணியைத்தான் கட்டிக்கிட்டாரு. நான்கூட என் பொண்டாட்டியத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா பாருங்களேன்.
******************
 சட்டைப் பையிலே பணத்தை வச்சா அதை என் பையன் திருடிடறான். என்ன செய்யறதுன்னே தெரியல்லே?

அதை அவன் புஸ்தகத்துக்குள்ளே வெச்சிடு. அப்ப அது பத்திரமா இருக்கும். தொடமாட்டான்.
*****************
இரண்டு கால்களையும் கழுத்தைச்சுத்தி குறுக்காக போட்டு கையால ரெண்டு கால் பாதங்களையும் பிடிச்சபடி எக்சசைஸ் பண்ணினாரே ஒருத்தர் , ரொம்பவும் ஆச்சரியமா இருந்தது.

அதைவிட ஆச்சரியம் கடைசியிலே அதுலே முடிச்சு விழுந்து ஒரு டாக்டரைக்கூப்பிட்டு அந்த முடிச்சைப்பிரிச்சி அவரோட கையைக்காலை விடுவிச்சி இப்ப அவருக்கு சுளுக்கு எடுக்க வேண்டியதாப்போச்சு
*************

உங்களுக்குச்சின்ன வயசுலே இருந்து என்ன ஆசை?

நான் பெரிய பாடகனாகி எல்லோரையும் சந்தோஷப் படுத்தணும்னு ஆசை.

கவலைப்படாதீங்க.நீங்க பாடலைங்கறதனாலேயே பல பேர் இப்ப சந்தோஷமாகத்தான் இருக்காங்க.
**************










எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (13-Oct-20, 9:26 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 80

மேலே