நகைச்சுவை துணுக்குகள் 28

அவர் பெண்டாட்டிதான் அவரை அவ்வளவு நல்லா கவனிச்சிக்கிறாங்க. அருமையா சமையல் பண்ணிப் போடறாங்க. வீட்டு வேலைகளையெல்லாம் பொறுப்பா தலைமேலே போட்டுக்கிட்டு நல்லபடியா செஞ்சி முடிக்கிறாங்க. அப்படி இருக்கும்போது அவர் ஏன் எல்லார் எதிரிலேயும் அவங்களைத் திட்டிப் பேசிக்கிட்டே இருக்கார்.

அதுவா? அப்பத்தான் அவரை நாலு பேர் ஆம்பிளைன்னு மதிப்பாங்களாம். இல்லேன்னா அவரை (henpecked husband) பொண்டாட்டி தாசன்னு சொல்லிடுவாங்களாம்.
********************
உங்க நாய் கடிக்குமா?

கடிக்காது.

அப்படின்னா இந்த நாயை நான் கொஞ்சலாமா?

ஓ! கொஞ்சலாமே.

(அவர் கொஞ்சும் போது நாய் கடித்து விட்டது.)
இந்த நாய் கடிக்காதுன்னீங்க. கடிச்சுட்டுதே.

இது எங்க நாய் இல்லீங்க. பக்கத்து வீட்டு நாய்.
********************

வக்கீல்: எப்பவும் எதிர் தரப்பு சொல்றதை கேட்டுக்கணும்.

அவன்: ஐயா, இதைத் தயவு செஞ்சி என் மனைவி கிட்டே வந்து சொல்றீங்களா?

***********

அப்பா என்னோட ஹோம் ஒர்க்கை நீங்க செஞ்சு தாங்கப்பா.

டேய், அது தப்புடா?

நீங்க செஞ்சித்தர ஹோம் ஒர்க் பத்தி எங்க வாத்தியாரும் அதைத்தான் ஒவ்வோரு தடவையும் சொல்றாரு. இந்தத்தடவையாவது சரியா செஞ்சித்தாங்க அப்பா

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (17-Oct-20, 7:21 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 133

சிறந்த நகைச்சுவைகள்

மேலே