அருமையான கவிதைகள்

🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺

பத்து மாதம்
சுமந்தவளை
ஏமாற்றி விட்டு
ஒருவனோடு
ஓடி வந்தேன்...
இப்போது
நான்
பத்தமாதம்
சுக்கும் படி செய்து விட்டு
அவன்
ஒடி விட்டான்
என்னை ஏமாற்றவிட்டு...!

🕐🕐🕐🕐🕐🕐🕐🕐🕐🕐🕐

தலையை
"மொட்டை " அடிப்பதாக
வேண்டினாலும்
ஆண்டவன்
"உங்கள் குறையை
தீர்த்து வைப்பான்" என்று
நம்பவைக்காமல் போயிருந்தால்...
கோவில்களில்
மக்கள் கூட்டம்
மிக மிக
குறைவாகவே! இருந்திருக்கும்....
ஆம்.....!
ஏழைகளிடம்
என்ன இருக்கிறது
"முடியை "தவிர....!

🕑🕑🕑🕑🕑🕑🕑🕑🕑🕑🕑
"எனக்கு
நேரம் சரியில்லை" என்று
கிளி சோதிடர் சொன்னாலும்...
எனக்கு "மகிழ்ச்சியே !"
என்னால் கிளிக்கு
ஒரு நெல் கிடைத்ததே! என்று...

🕒🕒🕒🕒🕒🕒🕒🕒🕒🕒🕒

கையினால் தொட்டால்
தீட்டு என்று சொன்ன
மேல்ஜாதிகாரனை.....
காலால் உதைத்து
"கட்டையை" சரி செய்கிறான்
"வெட்டியான்"

*கவிதை ரசிகன்*

🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺

எழுதியவர் : கவிதை ரசிகன் (18-Oct-20, 5:32 pm)
பார்வை : 241

சிறந்த கவிதைகள்

மேலே