"பெண்கள்"kavipriyan

மழலையாய் பிறக்கும் போது
மாணவியாய் படிக்கும் போது
மனைவியாய் மாலைசூடும் போது
மழலைப்பருவத்தில் புன்னகையில்
மிதந்தோம்........
மாணவ பருவத்தில் பண்புகளுடன்
வளர்ந்தோம்........
மானைவியான பின்பு குடும்பத்தின்
அக்கறைக்காக வாழ்வோம்......
எல்லா ஆண்களும் எங்களுக்கு
மரியாதை தருவதில்லை......
நாங்கள் அவர்களுக்கு எப்போதும்
மரியாதை தருவதுண்டு....
நாங்கள் புகழை தேடுவதுண்டு,
தருவதுண்டு,பெறுவதில்லை....
எங்கள் பயணங்களில் எத்தனையோ
காதல் தடைகள்.........
அத்தனையும் கடந்து செல்கிறோம்
எங்கள் லட்சியங்களை நோக்கி......
எங்கள் திறமையெல்லாம்
வெல்லாமல் அல்ல
சொல்லாமல் மட்டும்.....!
by
kavipriyan

எழுதியவர் : கவிப்ரியன் (22-Sep-11, 8:56 am)
பார்வை : 575

மேலே