கல்கி அவதாரம்
இருளால் ஒளி வந்ததா இல்லை
இருள்போக்கிட ஒளி வந்ததா
பிரளயத்தில் எங்கும் நீரோ நீராம்
இருள் மூடிய உலகம் எங்கும்
அழிவின் ஓலமாம் ருத்ரனின்
ஊழித் தாண்டவமாம் அது
உடுக்கையின் ஓசை ...... அழிவெல்லாம் ஓய்ந்திட
மயான அமைதி எங்கும் .....
மெல்ல வானம் திறக்க ..... மழையும் குறைய
வெள்ளமும் குறைய , நீர் மட்டமும்
பொங்கிய கடலும் அமைதியில் இப்போது..
மேகத்தைக் கிழித்து வந்து உதித்தான்
மீண்டும் சூரியன் ..... இருள் போனது
ஒளிமயமான உலகம் மீண்டும்
புது யுகமாய் ...... தொடங்க
கலி போனான் காணாமல்
தூரத்தில் .... தூரத்தில் அடிவான விளிம்பில்..
ஒரு வெண்ணிற குதிரை ....
அதன்மேல் வீற்றிருந்து வீரன் கையில் கத்தி..
தீயவை அழிந்தன என்ற திருப்தியில்
மேல்வானம் நோக்கி மெல்ல மெல்ல ஏற
சூரியனோடு கலந்து போனார் சூரிய நாரணனாய் ..
என்னுள் காட்சி தந்த கல்கி அவதாரம் ....
அரி அரன் இயக்கத்தில்
மீண்டும் மீண்டும் வரும் யுகங்கள்
இதோ புதிய படைப்பு துடுங்க
வந்தார் அரியின் புத்திரனாய் பிரமனும் !

