விவசாயம்

என் தமிழே உனக்கு முத்தமிட்டு என் தொகுப்பை உன்னுடன் சேர்த்து விவசாயிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்...

"பூங்காற்று போர்வை தேடும் புடையல்,
மாதங்கத்தை அரைத்து பூசிய மங்குல்,
இளந்தென்றலின் தழுவலால் வெட்கிய பழனம்,
பிடுகு, கொடிமின்னலின் அத்துமீறல்,

வானை கிழித்து வரப் போகும் மாரி -மழையை
வரவேற்க காத்திருக்கும் விவசாயியின் கரங்கள்,
நொவ்வல் கடந்து இன்பம் பிறந்து,
புதியதோர் மதுகையோடு-வறுமையின்
விளையாட்டு விவசாயியின் வயிற்றில்,
ஓவம் ஆடினாலும் ஒக்கல் வாழ்-பசி
இல்லாமல் பார்த்து கொள்ளும்-வெள்ளந்தி
உள்ளம் படைத்த என் விவசாயியை
முகரிமை படைத்தோர் என தன்னை நினைத்து திரியும,
சில அற்ப பதறுகளால் என் விவசாயி இழிஞன் என தூற்றப்படும்
அவலம் எப்போது மறையும்.
விதைத்தவன் வறுமையில் வாடுகிறான்,
வருவிலி-விதைத்தவனை வாட்டுகிறான்
இனி விளையும் பயிரின் விலையை,
விதைத்தவன் நிர்ணயம் செய்வான்-நூழிலரும்
இனி விவசாயியிடம் கரம் தாழ்த்தி,
வணிகம் செய்யும் நேரம் அருகில்.

அனைத்து விவசாயிகளுக்கும் சமர்ப்பணம்

நன்றிகளுடன்-தமிழன் சாரதி

எழுதியவர் : தமிழன் சாரதி (23-Oct-20, 5:05 pm)
சேர்த்தது : தமிழன் சாரதி
Tanglish : vivasaayam
பார்வை : 46

மேலே