பதினாறு வயது 2

வணக்கம்
எனது பெயர் வீரா
எனக்கும் என் காதலி ஜோதிக்கும் இடையே நடந்த உரையாடல்களே
இச்சிறுகதை
வாருங்கள் தொடரலாம்....

ஜோதி : நீ என்னை நேசிப்பதற்கு
முன்பிருந்தே நான் உன்னை நேசித்து
கொண்டிருந்தேன் உனக்கு தான் தெரியாது...

நான் குழப்பத்தில். என் சொல்கிறாய் என்னை உனக்கு முன்பே தெரியுமா

அதற்கு அவளும் ஆமாம் எனக்கு உன்னை நன்றாகவே தெரியுமே...

என்ன சொல்கிறாய் எப்படி என்னைத் தெரியும்...?

ஏன் அது உனக்கு தெரிந்தே ஆகனுமா

ஆமாம் தெரிந்தே ஆகனும். சொல்

அப்படியானால் சொல்கிறேன்... கேள்
உன்னுடன் பயிலும் சத்யா உனக்கு தெரியுமல்லவா?

ஆமாம் எனக்கு தெரியும். இப்பொழுது அவளுக்கும் நான் கேட்ட கேள்விக்கம் என்ன சம்மந்தம்...

ஏன் அவசர படுகிற நான் சொல்கிறேன் பொறுமையாக இரு

ம் சரி சொல்லும். சொல்லித் தொலையும்

என்ன சொன்ன!

ஏ...நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் கோபம் கொல்லாதே..

போ நான் சொல்ல மாட்டேன். என்னை
நீ திட்டினாயல்லவா...நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்

என்னைப் பற்றி உனக்கு நன்றாகவே
தெரியும் தானே நான் உன்னை திட்டுவேனா சொல்லுடா...செல்லம்

சரி சொல்லித் தொலைக்குறேன்...

அப்படி சொல்லுடா...
என் செல்லம் என்கிட்ட சொல்லும்

சரி ஓவரா ஐஸ் வைக்காதே நான் சொல்கிறேன். சத்யா தான் உன்னை முதன் முதலில் காதலித்தாள்

என்ன சொல்கிறாய் இது உண்மையா
என்னால் சுத்தமா நம்பவே முடியலயே.
என்னையும் ஓர் பெண் காதலித்தாளா
அய்யோ. நீ சொன்னது உண்மைதானா

ஏன்..ஏன் இப்படி அவசரம். அவ்வளவு ஆசையோ...விட்டால் அவளையே திருமணம் செய்துவிடுவாயோ..
உன்னிடம் சொன்னது என் தவறாகிவிட்டதே அய்யோ....

அய்யோ அப்படியலாம் இல்லடா செல்லம். என் மனது முழுவதும் என்றும் நீ தான் இருக்கிறாய்
உன்னை விட்டு வேறு யாருமே
எனக்கு தேவையில்லை.

போதும்..போதும்..ரீல் சுத்தாத

என்னது ரீலா. அப்படியெல்லாம் இல்லை. எல்லாம் உண்மை தான்
நம்புமா

சரி நம்பிட்டேன்

அப்பாடி... அப்புறம் என்ன நடந்தது ?

மறுபடியுமா...!

ஆமாம் ஒருமுறை சொல்லேன்

சத்யா எப்பொழுதும் உன்னை பற்றி என்னிடம் உலரிக் கொண்டே இருப்பால். அதை முதலில் கேட்கும் பொழுது எனக்கு வெறுப்பாக இருக்கும்.

என்னது வெறுப்பா ?

ஆமாம் டா வெறுப்பு தான். இப்ப உனக்கு சொல்லனுமா வேண்டாமா?

சரி வேண்டும் சொல்லு...

என்னவென்று தெரியவில்லை சில நாட்களாக நான் உன்னை பற்றி நினைத்து கொண்டிருந்தேன். ஏன் என்றே தெரியவில்லை என் மனமோனே முழுமையாக என்னிடத்தில் இல்லாதது
போல் இருந்தது...உன்னிடம் சொல்லவும் முடியவில்லை...

ஏன் உனக்கு பிடித்தா சொல்ல வேண்டியதுதானே ?

இல்ல என்னால் முடியவில்லை...

அப்புறம் இப்போது எப்படி சொன்ன ?

நீ என்னை நேசிக்கிறாய் என்று
எனக்கு தெரியும். அதனால் தான் சொன்னேன்

உண்மையாவ உனக்கு எப்படி தெரியும்?

சத்யாவோட தோழி தான்
சொன்னால்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லைே
அவள் பொய் சொல்லி இருப்பா?

அப்புறம் ஏன் இங்கே நிக்கிற போக வேண்டியதானே...

நான் சும்மா நிக்கிறேன்...

அப்படியா நான் தெரியுமா காதல
சொல்லிட்டேன்...சரி நான் போறேன்

ஏ..ஜோ போகத நான் சும்மா தான் சொன்னேன்

இருந்தாலும் நான் வரமாட்டேன் போ

நான் உன்னை நேசிக்கிறேனு
சொன்னால் வருவாயா

மாட்டேன் போ...

சரி போ எனக்கு தேவையில்லை

அடப்பாவி என்னை விட்டு போகவா
பாக்குற...லூசு..லூசு

சரி..சரி..அதை விடு உன்னிடம் ஒரு சிறிய கேள்வி கேட்கலாமா ?

என்ன கேள்வி !

கேட்கவா ?

சரி கேள்

கேட்டால் கோவப்படக் கூடாது சரியா ?

ம் மாட்டேன் நீ கேள்...

உன் தோழியுடைய காதலனை நீ காதல் செய்வது தவறில்லையா ?

அதற்கு கூறிய அழகிய பதில்
அடுத்த சிறுகதை
தொடரும்....

எழுதியவர் : ஜோவி (26-Oct-20, 8:39 am)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 230

மேலே