பதினாறு வயது 1

வணக்கம்
எனது பெயர் வீரா
நான் பள்ளி பயின்ற பொழுது
ஏற்பட்ட சின்னஞ்சிறு காதலே
இச்சிருகதை.....

"வயது என்பதே வாழ்விலே
முக்கியமான ஒன்று
அதிலும் காதல்அரும்பிய வயது என்பது எவர் வாழ்விலும் மறக்க முடியாத ஒன்று"

அப்படி என் வாழ்விலே மறக்க முடியாத
நினைவை தந்த வயது
எனது பதினாறாவது வயது.
இனி தொடரலாம்....

நான் பள்ளியிலே ஒரு சராசரி மாணவன்..
நான் அதிகளவு படிப்பதில்லை
ஆனால் விடுமுறை மட்டும்
அதிகளவு எடுத்திருக்கிறேன்...
ஒரு நாள் நான் பள்ளி முடிந்து
வீட்டிற்கு வரும் வேலையில்
என்றும் இல்லாமல் அதிகநேரம்
பேருந்திற்காக காத்திருந்தேன்....
அப்பொழுது எனக்கு எதிரே உள்ள
பள்ளியில் இருந்து பெண்களும்
பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று
கொண்டிருந்தார்கள்.
அவர்களில் பல பெண்களைப்
நான் பார்த்தேன், ரசித்தேன்.
ஆனால் என் மனமோ ஒரு பெண்ணை
மட்டும் கண்டு மயங்க ஆரம்பித்தது...

அவள் பெயர் தான் ஜோதி
அவளை நான் தேவதையின் மறு உருவம் என்றே சொல்வேன்...
ஏனென்றால் நான் பார்த்து, ரசித்து ஏன் திகைத்து போன பல பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று
அவளிடம் இருந்தது.
என்னை மெய்மறக்க வைத்தது.
அதை அழகென்று சொல்லமாட்டேன். ஏனென்றால்
பெண்களின் அழகு என்பதே
அவர்களின் அடக்கத்தில் தானே இருக்கிறது...
என்னவோ என்ன மாயமோ தெரியவில்லை
என் மனம் முழுவதும் அவளே நிறைந்துவிட்டால்.

என் மனதில் நின்ற என்னவளே
அந்த அழகிய பெண்ணவளே

ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டு, ரசித்துக் கொண்டு ,
ஏன் நினைத்து கொண்டே
என் வாழ்க்கை போனது...

அப்பொழுது தான் எனக்கு தெரிய வந்தது என்னுடன் பயிலும் சக தோழி சத்யாவும் அவளும் நெருங்கிய நண்பர்கள் என்று
எனக்கான காதல் பாலத்தை அவளிடம்
இருந்தே ஆரம்பிக்க நினைத்தேன். அதையே செயல்படுத்தினேன்
நானும் ஜோதியும் நண்பர்கள் ஆனோம்...பழக ஆரம்பித்தோம். அவளை பற்றி நானும் என்னைப் அவளும் நன்றாக புரிந்து கொண்டோம். இருப்பினும் என் காதலைச் சொல்ல தயக்கம் இருந்தது
சில நாட்களுக்கு பிறகு அவளிடம்
என் காதலைச் சொல்ல
ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது

அந்த ஒரு நாள்
அழகிய பொங்கல் திருநாள்
அன்று நான் அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று ஒரு முடிவோடு தயாராக இருந்தேன். ஆனால் அவளே
என்னிடம் வந்து பேசுவாள் என்று நான்
கனவிலும் நினைக்கவில்லை.

அழகாய் வந்தாள்,அருகே நின்றால்,
எனக்கான வாழ்த்துரைச் சொன்னால்,
என் வாழ்க்கையே நீ என்றால்...
எனக்கோ ஒன்றும் புரியவில்லை
இருப்பினும் அவளை
மறுக்கவும் முடியவில்லை .ஏன் என்ற காரணமே தேவையில்லாமல் போனது
அவளுடன் இருந்த அந்த அழகிய
தருணம் எனது வாழ்நாள் முழுவதும்
தொடர நினைத்தேன் அப்படி ஓர்
ஆனந்தம். சில நொடிக்கு பிறகு
அவளிடம் ஓர் சிறிய கேள்வி .என்னை
நீ காதலிக்க என்ன காரணம் என்றேன்.

அதற்கு அவள் கூறிய வார்த்தைகள்...
ஆச்சரியம்...
அதுவும் ஒரு சிறுகதையை
தொடரும் ....

எழுதியவர் : ஜோவி (26-Oct-20, 8:37 am)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 218

மேலே