நிழல் நிஐமாகிறது

நிழல் நிஜமாகிறது


( கொரானாவுக்கு முன் இந்த கதை இருப்பதாக)

பார்வதியின் அழுகை நின்றபாடில்லை.
காலை முதலே அவளை அறியாமல் அழுதுகொண்டே இருக்கிறாள். வீட்டு வேலை அத்தனையும் அழுதுகொண்டே செய்தாள். காலை எட்டு மணிக்கே அவளுடேய கணவன் சண்முகம் வேலைக்கு கிளம்பிவிடுவான். அவனுக்கு காலை இரண்டு முறை டீ மட்டும் கொடுத்தால் போதும். அவனும் பார்வதி ஏன் அழுகிறாள் என்று கேட்ட வாய்பில்லை. காரணம், அவன் ஒரு டிராவல்ஸ் கம்பனியில் கார் ஓட்டுகிறான்.
அதனால் காலை ஆறு மணி முதலே அவன் செல் போனுக்கு கஸ்டமர் அழைப்பு வரும். அதனால் அவன் அதில் முற்றிலும் மூழ்கி விடுவான். அடுத்து பார்வதியின் ஆசை குழந்தைகள். பெரியவன் கதிர், ஏழாவது படிக்கிறான், இளையவள் யாழினி மூன்றாம் வகுப்பு படிக்கிறாள், அவர்களும் தன் அம்மா ஏன் அழுகிறாள் என்று கேட்க வாய்ப்பு இல்லை. காலை எட்டரை மணிக்கே அவர்கள் பள்ளிக்கு செல்ல மும்முரம் காட்டுவார்கள். காலை டிபனை அந்த சிறாற்கள் எப்போதாவது தான் சாப்பிடுவார்கள்.  எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பார்வதி தன் பிள்ளைகளுக்கு  மத்திய சாப்பாடு கட்டி கொடுத்து விடுவாள். துனி துவைக்கும் போதும் அவள் அழகை நிற்கவில்லை. குளிக்கும் போதும் தண்ணீருடன் அவள் அழகை கலந்து அவள் உடல் முழுவதும் ஓடியது. கண்ணாடி பார்த்து தலை சீவி, பொட்டு வைத்து, புடவை கட்டி அவள் வீட்டை விட்டு கிளம்பும் போது மணி காலை ஒன்பதரை.
ஒன்பதே முக்கா மணிக்கு அவள் பணி புரியும் எகஸ்போர்ட் கம்பனில் ஆஜர் ஆக வேண்டும். அவ்வளவு ஸ்டிரிக்ட்.  நாலு கால் பாய்சலில் பத்தே நிமிடத்தில் வேர்த்து விறுவிறுத்து, பணியிடத்தில் அமர்ந்தாள்.
எக்ஸ்போர்ட் கம்பனியில் டைலராக கடந்த ஐந்து வருடங்கலாக பணி புரிகிறாள்.
மலைபோல் வேலை குவிந்து இருந்தது.
கருமாரி அம்பனை மனிதல் நினைத்தே தன் தின வேலையை அவள் ஆரம்பிப்பாள்.
அன்று அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மீண்டும் அவள் கண்களில் இருந்து மளமளவென கண்ணீர் கொட்டியது. பார்வதியின் நெருங்கிய தோழி ஜானகி, இதை கவனிக்க,
" பாரு, என்னாச்சு"
" இல்லை ஒன்னும் இல்ல"
" சொல்லுடி என்னாச்சு"
" அதான் ஒன்னுமில்லை சொல்ரேன் இல்ல"
" அப்ப ஏன்டி அழுவுர, கண் எல்லாம் எப்படி வீங்கி இருக்கு, சொல்லு பாரு, என்னாச்சு"
பார்வதி இப்போது சற்று அதிக குரல் எழுப்பி அழ ஆரம்பித்தாள்.
" பாரு, கண்ட்ரொல் பண்ணு,
சூப்பர்வைசர் வரார்"

மத்திய சாப்பாடு சாப்பிடும் போது ஜானகி
பார்வதி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.

பார்வதி தன் பணியிடத்து வேலை முடித்து தன் வீடு திரும்பி , மிக சோர்வாக உள்ளே  நுழைந்தாள். டீ சூடு பண்ணி குடித்தது சற்றே அவளுக்கு தெம்பு அளித்தது. மாடிக்கு சென்று உளர்த்தி துணிகளை எடுக்க சென்றவளுக்கு அந்த உரையாடல் மிக வெகுவாக மனதை பாதித்தது. பார்வதி மாமியார் மகாலஷ்மியும், பக்கத்து வீட்டு அண்ணம்மாவும் பேசிய அந்த உரையாடல்.....
பார்வதியின் நெஞ்சை பிளந்தது.
"  அண்ணம், என் மருமக தான், ஆனா அவ கேரக்டர் இப்பவெல்லாம் சுத்தமா சரியில்ல"
" என்ன சொல்ர மகா"
" ஆமா, அண்ணம், எம்புள்ளைக்கு இவ துரோகம் பண்ரா"
" ஏய், மகா! நீ என்ன சொல்ர"
" அதை, எப்படி நான் என் வாயால சொல்ரது "
" மகா, நீ சொல்லலன்னா எனக்கு தலையே வெடிச்சிடும்"
" எதிர் வீட்ல, ஒரு மலையாள குடும்பம் குடுத்தினம் வந்திருக்கு இல்ல"
" ஆமாம்"
" அவங்களுக்கு ஒரே பையன்"
" ஆமா, நான் கூட பார்த்திருக்கேன், அதுக்கு என்ன சொல்லு"
" அவனுக்கு இன்னைக்கெல்லாம், இருந்தா பதினெட்டு வயசு இருக்குமா"
" அவ்வளவு தான் இருக்கு மகா"
" அந்த பையனை, இவ வச்சிருக்கா"
" மகா, என்ன சொல்ர, உண்மையாவா"
" அமாம் அண்ணம்"
" ஏன்டி, உம் மருமவ புத்தி இப்படி கிழ்தரமா போவுது"
" தெரியிலேயே, எல்லாம் அவன் கொடுக்கிர இடம்"
" மகா, சண்முகம் நல்ல மனுசன், அவனுக்கு உன் மருமவ துரோகம் பண்ணா.. கண்ணு போயிடும்"
" அண்ணம், மனசே சரியில்ல"
" மகா, என் பேர பசங்க, ஸ்கூல்ல இருந்து வந்துடாங்க, அப்பறம் பேசலாம், வரேன்"

மாடியில் இருந்து மட,மட வென ஓடிவந்த பார்வதி முகத்தை தலையனையில் புதைத்து கொண்டு 'ஓ' வென்று அழ ஆரம்பித்தாள்.

" உங்க மாமியாருக்கு கத்தி நாக்கு, எப்படி இப்படி எல்லாம் அவங்களுக்கு புத்தி போகுது. அவங்க நாக்குக்கு நரம்பே இல்லையா, பார்வதி  நீ ஒரு தப்பும் பண்ணல, பின்ன ஏன்டி இப்படி அழுவுர, விடுடி, எல்லாம் சரியாயிடும்" பார்வதியை தேற்றினாள் ஜானகி.
ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைத்த மாதிரி உணர்ந்தாள் பார்வதி. இருந்தாலும் வீண் பழி சுமப்பது அவ்வளவு சாதாரன விஷயம் அல்ல. காலகாலமாக இது பெண்களுக்கு சாபமா, அல்லது வரமா.
ச்ச என்ன சமூகம் இது. ஆழ் மனதில் அவள் அழகை ஓயவில்லை.

கதிரும், யாழினியும் உறங்கிவிட்டனர்.
சண்முகம் இன்னும் தூங்கவில்லை.
" என்னங்க, மாடிக்கு போகலாமா"
" போகலாமே, என்ன பாரு, இன்னைக்கு என்ன விசேஷம்"
" வாங்க, மாடியில சொல்ரேன்"
" பெளர்நமி வெளிச்சத்தில் நீ இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க"
" அப்படியா"
" உண்மை தான் பாரு, நீ எனக்கு எப்பவும் பேரழகி"
" ரொம்ப தான்"
" சரி, ஏன் திடிர்னு மாடிக்கு கூப்பிட்ட"
அவனை உற்று பார்த்தவள், அவளை அறியாமல் அவனை கட்டி அணைத்து 'ஓ' வென குலுங்கி, குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
" பாரு, ஏன் அழவுர, என்னாச்சு செல்லம் உனக்கு"
" ..............."
" சொல்லு பாரு, உனக்கு என்னாச்சு"
சண்முகம் அம்மாவின் ஈன உரையாடலை ஒப்பித்தாள்.
" தொ! பார் பார்வதி, யாரு என்ன வேனா சொல்லட்டும், உன் மேல எனக்கு நூறு சதவிகிதம் இல்ல ஆயிரம் சதவிகிதம் நம்பிக்கை இருக்கு, இதை மாதிரி விஷயம் எல்லாம் இனிமே எந்த நாயும் சொன்னாலும் அதை என் கிட்ட சொல்லாதே. நீ என் பொன்டாட்டி இல்லடி, நீ....நீ... என் உயிர்... நீ என்... குல தெய்வம்.
அவன் அவளை கட்டிபிடித்து அழ ஆரம்பித்தான்.

ஆறு வருடம் முன்பு,

சண்முகத்துக்கு ஆக்ஸிடண்டு.
அலறியடித்து பார்வதியும், மகாலஷ்மியும்
ஹாஸ்பிடலுக்கு ஓடி வர, i c u வில் சண்முகம். இரண்டு நாளுக்கு அப்புறம், உயிருக்கு ஆபத்து இல்ல, எப்படி பார்த்தாலும், கை, கால் fracture சரியாக ஒரு வருடம் ஆகும். டாக்டர் சொன்னது ஒரு விதத்தில் பார்வதிக்கும், மகாலஷ்மிக்கும் நிம்மதி கொடுத்தது.
" நீங்க தான் இவரு சம்சாரமா" டாக்டர் கேட்க
" ஆமாம்" பார்வதி சொல்ல,
" உங்க கிட்ட ஒரு விஷயம் தனியா பேசனும்"
மகாலஷ்மி வெளியேறியவுடன் டாக்டர் தன் பேச்சை தொடர்ந்தார்.
"  ஏறைகுறைய நீ என் பொன்னு வயசு, மனச தேத்திக்க, இந்த விஷயம் சொல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, பட் சொல்ல வேண்டிய இடத்தில நான், கேக்க வேண்டிய இடத்தில நீ, உங்க வீட்டுகாரர்ரால, இனிமே உன் கூட செக்ஸ் வச்சிக்க முடியாது. ஆண்மையெல்லாம் நல்லா இருக்கு, அடிபடும் போது கார் கதவு, அவரோட பென்னிஸ்( ஆண் உறுப்பு) கட் ஆயிடுச்சு. பிழைக்க வைத்ததே ஆண்டவன் செயல். இனிமே அவரு, யுரின் (urine) டியுப் (tube) ல தான் போகனும். வெரி sad news. "
சட்டென்று கருத்து போனது பார்வதி முகம்.
அவளுக்கு ஒரு நிமிடம் அந்த அறையே சுற்றியது. கண்களில் அருவியேன கண்ணீர் கொட்டியது.
" அவரை காபாற்றியதுக்கு நன்றி, அவரு உயிருடன், என் பிள்ளைகளுக்கு தகப்பனா இருந்தா அதுவே போதும்"
" உன்னை என் மகளா பார்க்குறேன், தகப்பனா எனக்கு மனம் வலிக்குது, "
" அவரு கிட்ட சொல்லலாமா"
" இது சொல்ல வேண்டிய அவசியமே இல்ல, தினமும், அந்த நரக வேதனை அவர் தான் அனுவிக்க போராரே"


"இந்த மாதிரி எங்கம்மா பேசரதுக்கு காரணம் நான் தானே பார்வதி"
"உங்கம்மா இது மாதிரி என் மேல பழி போடறது இது இரண்டாவது தடவை"
" நீ என்ன சொல்ர"
" உங்க கிளோஸ் பிரண்டு ராமகிருஷ்னன், கல்யாணம் ஆகாதவர், நம்ப பசங்க மேல பிரியம் வைத்து சாயந்திரத்துல டியூசன் எடுப்பார்"
" அது தான் எனக்கு தெரியுமே"
" அவரு ஏன்  இப்பவெல்லாம் நம்ம வீட்டுக்கு வருவதில்லை, தெரியுமா"
" அவரு, ஒரு நாள், நம்ம கதிருக்கு காய்சல் அதிகமா இருக்குன்னு, என்னையும் அவனையும் அவர் டூ வீலர்ல கூட்டிட்டு டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போனார். அவ்வளவு தான் உங்கம்மா இதே மாதிரி அவரையும், என்னையும் ரொம்ப அசிங்கமா பேசினாங்க, அது அவர் காதுல விழவே, அப்புறம் நம்ம வீட்டுக்கு வருவதை நிப்பாட்டிட்டாரு"
" இவ்வளவு , விஷயம் நடந்திருக்கா, ராமகிருஷ்னன், ஜெண்டில்மேன், என் கிட்ட இத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல, இப்படியே எங்கம்மாவ விட்டா, ஒரு நாள் நீ கோவத்துல ஏதாவது பண்ணிகினா, அது எனக்கு பேரிழப்பா போயிடும், இப்பவே, எங்கம்மாவ இது விஷயமா கேட்கவா, ஏன் என் பெண்டாட்டிய அநியாயத்துக்கு சந்தேகபடுரேன்னு"
" வேனாங்க, நீங்க என்னை நம்பரிங்க அதுவே எனக்கு போதும்"
" இல்ல, பார்வதி, இந்த விஷயத்துக்கு முற்றுபுள்ளி"
" ராஜா, நீ என்னை முழுமையா நம்பும் போது, யார் , எந்த நாய் என்னை பற்றி அவதூறு சொன்னா எனக்கு கவலை இல்லை"
" பார்வதி, என்னால, உனக்கு உடலால ஒரு சந்தோஷமும் தர முடியில, உனக்கு நான் மிக பெரிய துரோகம் பண்ணிட்டேன். என்ன தான் சமாதானம் சொன்னாலும், தாம்பத்தியத்துல, கணவன் மனைவி உறவு ரொம்ப அவசியம் தானே. சாரி, பார்வதி, என்ன மன்னிச்சிரு, நீ தியாகி இல்ல, நீ என் குலசாமி" கண் கலங்கிவிட்டான் சண்முகம்.
" நீங்க, என்ன பாரு, செல்லம் கூப்படறீங்களே, அது போதும் , அதுல தான் என் உயிர் இருக்கு. அடபோங்க, என்ன செக்ஸ், பெரிய செக்ஸ், உங்க அன்பு, பாசம், நம்ம கதிர், யாழினி போதும் எனக்கு.
- பாலு.

எழுதியவர் : பாலு (23-Oct-20, 11:22 pm)
சேர்த்தது : balu
பார்வை : 164

மேலே