ஒரு செவ்விளநீர் இருவர் ஸ்டரா

ஆடு தென்னையே ஆடு
தென்றல் காற்று தென்னங் கீற்றினைத் தழுவ
ஆடு தென்னையே ஆடு
தென்னங்கீற்றினை சன்னல் ஆக்கி கதிரொளி பாய
இன்னும் மகிழ்ந்து ஆடு தென்னையே ஆடு
தென்னம்பூக்கள் வெள்ளையாய்ச் சிரிக்க
செவ்விளநீர் காய்கள் சிவந்து சிரிக்க
ஆடு தென்னையே ஆனந்தமாய் ஆடு
இன்னும் சற்று நேரத்தில் அவள் வருவாள்
துப்பட்டா காற்றில் பறக்க தென்னையே உன்மீது சாய்ந்திருப்பாள்
காதலன் வர கனவுகளுடன் காத்திருப்பாள்
காத்திருந்த காதலன் வந்து காதல் கதைகள் பல சொல்லுவான்
அப்பொழுது சிறிது ஆடாமல் நீ நில்லு அந்தக் கதைகளை நீயும் கேளு
முடிந்தால் செவ்விளநீர் ஒன்றை உதிர்த்து பரிசாக வழங்கு
ஒரு செவ்விளநீரை ஸ்டரா போட்டு இருவரும் அருந்திக் கொள்வார்கள்
காதலில் இருவராயினும் எல்லாம் ஒன்றே என்ற பாடத்தை
நீயும் கற்றுக்கொள் தென்னையே !

எழுதியவர் : (29-Oct-20, 9:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே