முகநூல் பதிவு 182
நம்மால்
எங்கு முழு சுதந்திரமாக பழக முடிகிறதோ....
எங்கு மனதில் இருப்பதை ஒளிவுமறைவின்றி இயல்பாய் பேச முடிகிறதோ....
எங்கு நம் மனம் மிகவும் நெகிழ்ந்து போகிறதோ....
எங்கு சூழல் மறந்து மனம்விட்டு சிரிக்க முடிகிறதோ......
அந்த இடம் நிச்சயம் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமான அன்பு உள்ளங்கள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்க முடியும் ....
அந்த இடம் நம் நேசம் சுமந்த தாய்வீட்டிற்குச் சமம் ....
அப்படி ஒரு அன்பு சூழ் உலகிற்கு சென்று வரும் பாக்கியம் இன்று எனக்குக் கிட்டியது என்றால் அது மிகையாகாது....
ஆம்! இன்று திரு.செல்வம் , திருமதி.ஜெயந்தி செல்வம் தம்பதியர் அன்பு இல்லத்திற்கு....இல்லை இல்லை ஆலயத்திற்கு சென்று வந்தேன் ...
இன்று காலைதான் குறுஞ்செய்தி மூலம் என் படைப்புகளை வாங்கிக் கொள்கிறீர்களா என்று உரிமையுடன் கேட்டேன்... உடனே திருமதி.ஜெயந்தி அவர்களிடம் இருந்து ‘ஆம்’ என்று பதில் வந்தது... மிகவும் நெகிழ்ந்து போனேன் .... வாங்கிக் கொள்கிறேன் என்று அவர்கள் சொன்னதற்காக அல்ல...
எழுத்துலகில் அடியெடுத்து வைத்த ஆரம்பக் காலம் முதல் ... என்னை அன்பால் ஆதரித்து...., நேரில் சந்திக்கும் தருணங்களில் எல்லாம் அகம் நிறைந்தப் புன்னகையுடன் என்னை பாராட்டும் அவர்களின் பண்பு தான்.... இவர்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துகளுமே ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுத்துலகில் அடியெடுத்து வைத்த என்னை.... பலமாக வேரூன்றி... இன்று கிளைவிட்டு வளர வழிவகுத்தது....
பணம் இருந்தால் எதையும் வாங்கலாம்... பாசத்தை நிச்சயம் வாங்க முடியாது... அப்படிப்பட்ட பல பாசம் நிறைந்த உள்ளங்களை நான் சம்பாதித்திருக்கிறேன் என்று சொல்வதைவிட.... என் பெற்றோர்களும் பாட்டனார்களும் சம்பாதித்து எனக்காய் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.... மூன்றுத் தலைமுறையாக தொடரும் பந்தம் இது.....
அப்படிப்பட்டவர்களுக்கு புத்தகங்களை அனுப்புவதைவிட நேரில் சென்று கொடுப்பதே , அவர்கள் அன்பிற்கு நான் செலுத்தும் மரியாதை என்று என் மனம் சொல்லியது.... உடனே நேரில் வருகிறேன் என்ற செய்தியை தெரிவித்துவிட்டு புரப்பட்டேன்..... வாசலிலேயே வந்து வரவேற்றார்கள்.... சிறிது நேர உரையாடல்... அப்போதுதான் புரிந்தது அவர்கள் எவ்வளவு ஆழமாய் என் ஒவ்வொரு பதிவுகளையும் வரிகள் மாறாது நினைவில் பதித்து வைத்திருக்கிறார்களென்று... உரையாடுகையில் இடையிடையே பல தருணங்களில் என் படைப்புக்களில் உள்ள வரிகளை தவறாது அவர்கள் நினைவுகூர்ந்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன்.... நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்லி முற்று வைக்க நான் விரும்பவில்லை....
இந்த பந்தம் ஆயிரம் ஜென்மம் தொடர வேண்டும் என்று இறைவனிடம் மனதிற்குள் வேண்டிக் கொள்கிறேன்....
அன்பு உள்ளங்களிடம் அளவளாவி பேசுதல் ஆத்ம பலத்தை அதிகரித்து ஆயுளை கூட்டும் போலும்....
விடைபெற்று வரும்போது,
ஏதோ ஒரு மாபெரும் உந்தல் சக்தியை என்னுள் உணர முடிந்தது....
இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் படைப்புகளை எழுத்துலகில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் பெருக்கெடுக்கிறது....
என் எழுத்தும் இந்த அன்பிற்கு ஒருவகையில் பாலாமாய் அமைந்துவிட்டது என்பதில் பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். 💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️