வீறுகொண்டு போராடு
பழிக்கு அஞ்சா சிறுக்கும்பல் பலதாய்
பதவியில் அமர்ந்து கோலோச்சுகிறது
பாவம் பார்க்கும் பெருங்கூட்டம் இங்கு
பம்மி நின்று பயங்கொள்கிறது
இந்தநாளில் எதிர்க்க பயந்து சென்றால்
இல்லறத்தினுள்ளும் புகுந்து இம்சைப்பார்கள்
கலப்பட மொழியை கற்க கதறுவோர்
கடுமைத்தமிழில் தேறுவது எப்படி
வட மாநிலத்து வாலிபக்கூட்டத்தின் பல பேர்
தென்தேசத்து அரசு பதவியை பிடிப்பதெப்படி
தமிழில் தேறியோர் தமிழைப்படிக்க
தத்தளித்து நம்மை விரட்டுவது சரியோ
விதையில் அமிலத்தை கலக்க முயலுகையில்
வீறு கொண்டு எழுந்து அழித்திட வேண்டும்
விழி மூடிக்கொண்டு வீணராய் இருந்தால்
வீரிய மண்ணில் நச்சு விருட்சங்கள் முளையும்
முளையிலே கிள்ள முயன்றோமென்றால்
முழு நிம்மதி வாழ்வில் முன்னேறச் செய்யும்.
----- நன்னாடன்