முகநூல் பதிவு 183

யாம் பெற்றப்பேறு....!

தன் திறமையாலும் கடின உழைப்பாலும் வெற்றி முகட்டைத் தொட்டு மனதாலும் உயர்ந்த உன்னத மனிதர்களால் மட்டுமே மனம் திறந்து மற்றவர்களைப் பாராட்ட இயலும்.அப்படிப்பட்ட மாபெரும் மனிதர்
வாழ்வியலின் தத்துவம்
வாலிபத்தின் நித்தியம்
ஓவியத்தின் வித்தகம்
காப்பியத்தில் கவித்துவம்
வாய்மையில் உத்தமம்
நடிப்பில் நகாயுதம்
மதிப்பிற்குரிய ஐயா சிவகுமார் அவர்கள். அவ்வப்போது WhatsApp ‘ல் நல்லப்பல அரியத் தகவல்கள்,யோகா,உடற்பயிற்சி பற்றியும் மற்றும் அவருடைய சிறந்த சொற்பொழிவுகளையும் என்னுடன் பகிர்ந்து கொள்வார்.

நேற்று நான் முகநூலில் பதிவிட்ட என்
“ பொய்யாது பொழியட்டும்!” என்றக் கவிதையை ஐயா அவர்களுக்கு அனுப்பினேன்...
அதற்கு ஐயா அவர்கள்
“ அம்மா உன் தமிழுக்கு தலை தாழ்த்தி வணக்கம்” என மனம் திறந்துப் பாராட்டினார்.

இது என் எழுத்துக்குக் கிடைத்த மாபெரும் விருதாகக் கருதுகிறேன். இதை தங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஐயா அவர்கள் நோய்நொடியற்று நூறாண்டுக் கடந்து நீடூழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (31-Oct-20, 4:41 pm)
பார்வை : 65

மேலே