பறவைகளோடு வாழ்ந்து பார்க்க ஆசை

கிளியோடு பேச ஆசை
குயிலொடு சேர்ந்து பாட ஆசை
மயிலாடு சேர்ந்து ஆடிட ஆசை
மைனாக்களோடும் சேர்ந்து பாட ஆசை
கடலோர பனையில் விந்தை
கூடுகள் நைந்து அதில்
கூட்டு குடும்பம் நடத்தும்
தூக்கணாங் குருவி கூட்டில்
ஒரு நாள் குருவி பாஷைப்
பேசி வாழ்ந்திட ஆசை
சுதந்திரமாய் என்றும் இன்பமாய்
வாழ்ந்திடும் இப்பறவைகளைக் கண்டு
எனக்கு கொஞ்சம் பொறாமையே
ஆனாலும் அது என் உள்ளத்தில்
ஆனந்தம் சேர்க்குதே காணும்போது
கேட்கும்போது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Nov-20, 6:51 pm)
பார்வை : 143

மேலே