போசாமி வாசாமி
அலைபேசி உரையாடல்:
@@@@@@@@@@@@@@@@
தம்பி தர்மலிங்கம், நீ கல்கத்தாவுக்கு ஓடிப்போனவன் ஒரு கடையில வேலை பாக்கிறதா பத்து வருசம் கழிச்சுத்தான் தெரிவிக்கிற. சந்தோசம்டா.
#@@#@@@@
ஆமாண்ணே எனக்கும் சந்தோசம். ஒரு வங்காளிப் பொண்ணக் கல்யாணம் பண்ணிட்டேன். (இ)ரண்டு கொழந்தைங்க. (இ)ரண்டும் பசங்க. மூத்த பையன் பேரு கோசாமி (Goswmi). வயசு மூணு. போன வாரந்தான் (இ)ரண்டாவது கொழந்தை பொறந்தது. மூணு நாள் ஆகுது. அதுவும் ஆண் கொழந்தை. இன்னும் பேரு வைக்கல.
@@##@#@@#@@
தம்பி தர்மலிங்கம், மூத்த பையன் 'கோசாமி'ன்னா (இ)ரண்டாவது பையனுக்கு 'கம்சாமி'ன்னு பேரு வச்சிருடா. பொருத்தமா இருக்கும்.
#@########
நாஞ் செஞ்ச பாவத்துக்கு இனிமேல் நீங்க சொல்லறபடி கேக்கிறேன். நீங்க சொன்னபடியே சின்னப் பையனு 'கம்சாமி'ன்னே பேரு வச்சிடறேன.