எனக்கு சத்துணவு தேவை

ஏன்டா கருநாக்கு கந்தா, உன்னை எத்தனை தடவைடா கைது பண்ணறது..மூணு மாசம் உள்ளே. ஒரு வாரம் வெளில. என்ன பொழப்புடா இது?
@@@@@@@@
அய்யா, நான் திருடறதே அந்தச் சத்துணவுக்குத்தான்.
@@@@@@@
என்னடா சொல்லற கருநாக்கு?

எங்க பாத்தாலும் அரிசிச் சோறு, தோசை, இட்லி. இதையெல்லாம் தின்னு ஒடம்புல சத்தே இல்லீங்க.
@@@@@@@@
அப்பறம் சத்துணவு எங்கடா தர்றாங்க? மாடணவர்களுக்குப் போடற சத்துணவா?
@@@@@@@@
போங்கய்யா. வெளையாட்டா பேசாதீங்க. ஜெயிலல தர்தற களி உருண்டை, அவிச்ச பட்டாணி, சுண்டல் கடலை, வேர்க்கடலை இதுமாதிரி சத்துணவு அஞ்சு நட்சத்திர ஓட்டல்லகூட கெடைக்காதுங்க.
@@@@@@@@@
ஒரு கொழந்தைகிட்ட இருந்து ஒரு பவுனு சங்கிலி திருடிட்டு நீயே காவல் நிலையத்துக்கு எங்க திருடனங்கிற விவரத்தை லத்தி அடி வாங்காமயே சொல்லீட்ட. நாளைக்கு காலைல பத்து மணிக்கு மூணு மாச தண்டனையை அறிவிப்பாங்க. சத்துணவுக்கு குடுத்து வச்சவன்டா நீ!

எழுதியவர் : மலர் (5-Nov-20, 6:33 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 132

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே