பாட்டினு எம் பேரை மாத்துங்க

'பாட்டி'னு எம் பேரை மாத்துங்க!
#####

மூன்றாம் வகுப்பு படிக்கும் பையன்:

அப்பா, டீவில ஒரு விளம்பரத்தில ஒரு தாத்தா வர்றார். பெரிய ஜவவுளிக்கடை உரிமையாளர். மூணு மாடிக் கட்டடம். அவுரு பேரு ஹீராலால் பாட்டி. பெரிய பணக்காரர் போல இருக்குது. பார்த்திபன்ங்கிற எம் பேரு எனக்குப் பிடிக்கல. எம் பேரை 'பாட்டி'னு மாத்துங்க. நானும் பணக்காரன் ஆகணும்.
@@@@@@@
பார்த்திபா, உம் பேரை 'பாட்டி'னு எப்படி மாத்தறது? நீ என்ன உம் பாட்டி மாதிரி வயசான தாயா? நீ பையன்தானே? அந்தப் பேரை வச்சா உன்னை மத்தவங்க கிண்டல் பண்ணுவாங்களே.
#######
இல்லப்பா. தமிழ்ல 'பாட்டி' அப்பாவோட அம்மா. அம்மாவோட அம்மா. இவுங்கதானே. டீவி விளம்பரத்தில வர்ற 'பாட்டி' இந்திப் பேரு. அந்தத் தாத்தா ஆம்பளதானே. அவருக்கு ரண்டு பேரு. 'ஹீராலால்' மொதப் பேரு. 'பாட்டி' ரண்டாவது பேரு. அந்த ரண்டாவது பேரு 'பாட்டி'தான் எனக்கு வேணும். என்னோட வகுப்பில் பையன்கள் எல்லாம் விதம்விதமா இந்திப் பேருங்கள வச்சிருக்கிறாங்க. எனக்கு இந்திப் 'பாட்டி' பேரு வேணும். இந்திப் பேருனா எல்லாம் 'ஸ்வீட் நேம்'னு சொல்லுவாங்க அப்பா.
############
சரிடா பார்த்தி. நீ போயி வெளையாடு. நீ சொன்னபடி அடுத்த வாரத்தில உன்னைப் 'பாட்டி' ஆக்கிடறேன்.
###############################
Bhatti = surname in North India.

எழுதியவர் : மலர் (31-Oct-20, 12:05 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 144

மேலே