கமலா ஹாரிஸ்

உடை மாற்றும் நிகழ்வல்ல
புணர்ந்து உயிர் கொடுத்தல்
உள்ளார்ந்த புரிதலின் முதிர்ச்சி
உடன்பட்டு வாழுதலில் தேர்ச்சி
பன்னாட்டு மனிதர்களின் எண்ணம்
பண்பாட்டை மீறிய ஒரு பின்னம்
இலை போட்டு சாப்பிடுவதைப்போன்ற
இன்பத்திற்கான வடிகாலே புணர்வு
தடுமாற்றத்தில் கரு தங்கிப் போனால்
தளர்வெதுவும் இல்லாமல் வளர்ப்பர்
தந்தை தாய் அதற்கெதுவும் வேண்டாம்
தரணியில் செழிப்பாகவே வளரும்
வளமான அறிவிருந்தாலே போதும்
வாழ்வதற்கு பலவாசல்கள் திறக்கும்
எவறோடும் என்றேனும் இணைந்து
இல்லறத்தால் பிணையலாம் சிறந்து
அதிபராக அதற்குண்டு உரிமை
பிறப்பைப் பற்றி கொள்ளவேண்டாம் சிறுமை
வானவில்லாய் இருக்கும் அவர் மனங்கள்
உலகோர்க்கு அவர்களே சிறந்த உதாரணங்கள்
பழமையில் இல்லை என்பார் பெருமை
உலகையே சந்தையாக்குவது அவர்களின் முறைமை
எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் இயல்பு
அதை கூர்ந்து ஆய்ந்தால் கிடைக்கும் நமக்கு தெளிவு
- - - - நன்னாடன்.