தீப ஒளி மலரட்டும்

தீபாவளி திருநாளில்
ஜொலிக்கின்ற
தீபஒளியில்
நம் வாழ்க்கையின்
இருள்கள் விலகட்டும்..!!

இறைவனின்
திருவருள்
பெருகட்டும்...!!

வண்ண வண்ண ஆடைகளில்
புதுமைகளை விரும்பும்
நமது உள்ளங்களிலும்
புதுமையான எண்ணங்கள்
வண்ணங்கள் வீசி
பிறக்கட்டும்...!!

வெடித்து சிதறும்
பட்டாசுகள் போல்
நம் கவலைகள்
எல்லாம் வெடித்து
சிதறி இன்பங்கள்
பொங்கட்டும்...!!

எல்லோருக்கும்
இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Nov-20, 1:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 2033

மேலே