இமயச் சிந்து நதி
இமயச் சிந்து நதி
என்று தொலைந்ததிந்த சிந்துநதி நாகரீகம்
இன்றுதோண்டிச் சொன்னார் திராவிடம் -- நன்றுதான்
அன்று திராவிடம்சிந் தாற்றங் கரையிலே
பொன்றுதமிழ் அன்றுவாழ்ந்த தெங்கு
சிந்துநதிக் காவிரிக்கும் ஆயிரம் மைலிடை
முந்தும் மொழியும் பலவுண்டு -- விந்தை
திராவிடன் ஆங்கிலன் இட்ட பெயராம்
திராவிடன்பேர் யார்க்குமில்லை யிங்கு
திராவிட இனமொன் றிங்கில் லைசொல்
திராவிட இனமொழி யுமிங்கில் லைசொல்
தனியொரு மொழியிட முமில்லை அதற்கு
தனியொரு சரித்திரம் கிடையாது
பகுத்தறியா மூடர் ஆராயா யீர்த்தார்
சொகுசு திராவிடனாய் மாற்றி -- பகுத்து
அறிவான் திராவிடன் கால்ட்வெலிட் டப்பேர்
அறிந்தபோதும மாற்றாத தேன்
....