அன்புக்கு எல்லை இல்லை
அன்புக்கு எல்லை இல்லை
பரபப்பான சென்னை நகர வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ராகவனும் மைதிலியும் திணறிக்கொண்டிருந்தார்கள். நகரில் மனிதர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கை தினமும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்..ராகவன் ஒரு தனியார் கம்பெனியில் எழுத்தராக சொற்ப ஊதியத்தில் வேலை செய்து வந்தான். மைதிலி வேலைக்கு செல்லவில்லை . வீட்டில் இருந்த படி குடும்பத்தை திறம்பட நன்கு நிர்வாத்து வந்தாள். அவர்களுக்கு அரவிந்த் என்ற மகன் பொறியியல் பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருந்தான். ஒருநாள் பைக்கில் அரவிந்தும் மைதிலியும் கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார்கள். செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு விடுகிரது . இருவருக்கும் காயம் ஏற்பட்டு விடுகிறது. இந்த விஷயத்தை கேள்விபட்டு பதறியபடி அங்கு சென்று அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கிறான். அவர்கள் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைகிறார்கள். ராகவன் அதன் பிறகே நிம்மதி அடைகிறான்.பணம் உள்ள இடத்தில் பாசம் இல்லை. நடுத்தர வர்க்க மக்களிடம் தான் உண்மையான பாசம் உள்ளது எனவே அன்புக்கு எல்லை இல்லை. .
அன்புடன் ,
வெங்கட்