நோனார் நசை

நோனார் நசை

தோழி நோனார் உன் முடுகை குறைத்து
உன்னை தபுதல் ஆக்க துடிக்கின்றனர்

மனாலம் என முகமும்,
மிஞிறு என இதழும்,
அரம்பால் அழகாகிய உன் குணமும்,
நீறு நீறாக போழ்வு கண்டு
சிதற செய்து விடுவார்கள்

உன்னை ஒரு குழிசி என பொசிவாக்கி கருநிலமாக்குவதே நோனாரின் நசை
கவனம் தோழி..

எழுதியவர் : பாத்திமா அஸ்ரா (23-Nov-20, 12:17 am)
சேர்த்தது : FATHIMA ASRA
பார்வை : 145

மேலே