தேடல் களம் போட்டிக் கவிதை
அரம்புவால் மாண்டார்
நேரிசை வெண்பா
அரம்புவளர் போழ்தலால் நோனாரா னார்பார்
தரம்கொண்ட மன்னர் இருவர் -- கரபலம்
பார்க்க முடுகுடன் மோதித் தபுதலானார்
சோர்ந்து பொசியும்புண் ணால்
சிறுசிறு சச்சரவு வளர்த்துக்கொண்ட அரசர்கள் பகையாகி பலப்பரீட்சை நடத்தப்
போர்புரிந்தனர். இருபடையும் வீணாக வேகமாய் மோதிப் போர்காயங்களினால்
ஏற்பட்டு அதனால் ஊனீர் அதிகம் கசிந்தும் இறந்துபட்டார்.
உண்மை விவசாயி
கருநிலக் கல்லாங்குத் தையும் நசைந்து
அருகி முயன்றுழுவர் காணும் -- பருகிப்பின்
கூழை குழிசி முகந்துநீர் பாய்ச்சிசெய்
யேழை விவசாயம் காண்
ஏதும் விளையாத கல்லாங் குத்துநிறைந்துள்ள பாறை இடுக்குத் துண்டு துண்டான
நிலத்தையும் ஏதாவது விளையும் என்ற ஆசையால் ஏழை விவசாயக் கூலி குடிசையில்
மிஞ்சி யிருந்த கூழைக் குடித்துவிட்டு. தொலைவிலுள்ள நீர் நிலையில் மண்பானையில்
நீரை முகந்து வந்து அந்த பாறை நிலத்தில் ஊற்றி சேடையாக்கி முயற்சி தளாரா
விவசாயம் செய்தானாம்.
கோயில் பிரசாதம்
நேரிசை வெண்பா
தேனுண் னவரும் மிஞிறுரீஇங் காரமும்
தானுங் கவர்பூவும் பக்தரையும் -- தோனும்தோள்
மாலைசிவ சக்திசாதம் நீறும் மனாலமீவர்
மாலைத் தொழத்துளசி யாம்
கோயில்கள் பக்கத்தில் பூந்தோட்டம் இருக்கும். இந்தப் பூந்தோட்டப் பூக்கள் வாசனை
தேனீக்கள் ரீங்காரமிட்டு வரும்படி செய்யும். பக்தர்களையும் இப்பூந்தோட்டம் கவரும்.
இதே பூக்கள் கடவுளர் சிலைகளின் தோளுக்கு சாத்தும் மாலைகளாகவும் மாறும்.
கோயில்களில் சிவனென்றால் திருநீறும் சக்தியென்றால் குங்குமமும் மாலவன்
என்றால் துளசியும் பிரசாதம் வழங்குவர்.
.......