இறைவன்
நம்பினார் கெடுவதில்லை இது
நான்கு மறைத் தீர்ப்பு ...........
நம்பாதாரையும் வாழவைப்பதின் ரகசியம்
இதில் ஏது ரகசியம்
பசிக்கு கஞ்சி வேண்டி வரிசையில்
நிற்போரில் வம்புக்காய் நிற்போரும் உண்டு
கஞ்சி ஊற்றுபவன் எல்லோருக்கும் படி அளப்பான்!
இறைவன் கண்முன் அனைவரும் சமமே
தீயவரைத் தவிர .... தன்னை நம்பாதவரை
அவன் தீயவர் என்று ஒதுக்குவதில்லை
பாரபட்சம் காட்டாத தாய் போல