தரணி போற்றும் தமிழ்நாடு கவிஞர் இரா இரவி
தரணி போற்றும் தமிழ்நாடு! கவிஞர் இரா. இரவி
தரணியின் முதல்மொழி பேசிடும் மாநிலம்
தன்னிகரில்லாப் பெருமைகள் பெற்ற பெருநிலம்!
பண்பாடு பாருக்குப் பயிற்றுவிக்கும் மாநிலம்
பாரதம் போற்றிடும் பைந்தமிழ் மாநிலம்!
திருவள்ளுவரை தரணிக்குத் தந்திட்ட தமிழ்நாடு
திருக்குறளால் தரணிபுகழ் பெற்றிட்ட தமிழ்நாடு
கவிக்கம்பனை பாரதியாரை பெற்ற தமிழ்நாடு
கவிதைகளால் பார்புகழ் பெற்ற தமிழ்நாடு
கலைநயமிக்க கோவில்கள் நிறைந்த தமிழ்நாடு
காண்போர் நிலையும் சிலையாகும் தமிழ்நாடு
கொடைக்கானலும் ஊட்டியும் உள்ள தமிழ்நாடு
கடற்கரைகள் நிறைந்திட்ட நல்ல தமிழ்நாடு
குற்றால அருவியென பலஅருவிகள் கொண்ட தமிழ்நாடு
குற்றால குறவஞ்சி இலக்கியம் தந்திட்ட தமிழ்நாடு
சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் தமிழ்நாடு
சங்கத்தமிழ் இலக்கியத்தை வழங்கிய தமிழ்நாடு
ஆத்திகமும் நாத்திகமும் நிறைந்திட்ட தமிழ்நாடு
அனைவரையும் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
பல்வேறு மதங்கள் கொண்ட தமிழ்நாடு
பண்பட்ட மனிதர்கள் வாழும் தமிழ்நாடு
அமைதி பூங்காவாகத் திகழ்ந்திடும் தமிழ்நாடு
அன்பைப் பொழிவதில் சிறந்திடும் தமிழ்நாடு
அண்டை மாநிலங்களுக்கு உதவிடும் தமிழ்நாடு
அனைவரிடமும் பாசம் பரிவு காட்டிடும் தமிழ்நாடு
மொழியின் பெயரால் அமைந்திட்ட தமிழ்நாடு
மொழியை விழியாகக் காத்திடும் தமிழ்நாடு
உலகெலாம் தமிழைப் பரப்பிடும் தமிழ்நாடு
உலகின் முதல்மாந்தன் தோன்றிய தமிழ்நாடு
கீழடியின் மூலம் தொன்மைமிக்க தமிழ்நாடு
கீர்த்தியால் தரணி போற்றும் தமிழ்நாடு
--
.