வானவில், அவள், கிளியும்
வானத்தல் l எழுநிறத்தில் பதிந்த
வானவில் ,,,,, அதைப் பார்த்த
என்னவள் அன்பே எனக்கு
அந்த அழகு வில்லைக்
கொண்டு தருவாயா என்க
நான் சொன்னேன்' என்னன்பே
அந்த வானவில் கானல்போல்
மறைந்துவிடும் ..... அதற்கு பதில்
உனக்கு நான் தரும் பரிசு
இந்த பஞ்சவர்ணக் கிளி .....
வான விளைத்த தொடமுடியா நீ
இந்த கிளியைத் தொட்டு
அதன் நிறம் அனுபவிக்கலாம்
என்றேன்.... ' அவள் இப்போது
'அன்பே ஏதோ நான் பெரிய
அன்னை சீதா என்றும் நீ
ராமபிரான் என்றும் நினைத்து
உன்னை வானவில் கொண்டுதர
கேட்டேன் ....... அபரிமித என்
காதலின் தவறு இது அன்பே
மன்னிக்க வேண்டுகிறேன்....
இதோ தரைக்கு வந்துவிட்டேன்
'இந்த அழகு கிளியின் நிறத்தில்
வான வில் நிறம் கண்டேன்
ரசித்தேன்..... இதோ கிளியே
நீ இனி பறந்து போ....
கிளி பறந்து போக
அவளும் மண்ணிற்கு வந்தாள்