சாதி மதம் கொடுமை
சாதி மதம் கொடுமை
ஆசிரியப்பாககள்
தேனொழுகும் கவிதை யென்று சொல்லி
காணொளி யிலுமதைக் விளக்கு கின்றார்
யாரும் ஜாதியை ஒழிகவென் றுபேசுவர்.
ஜாதியில் மணம்செய்வர் அவரின் மகர்க்கு
படிப்பதோ இராமா யணமாம் பின்னவர்
இடிப்பதோ பெருமாள் கோயிலாம் பழமொழி
இதிலெங்கே புரட்சி மூடா
சதியாய் நல்லதொரு கலாச்சார மழிக்காதே
கட்சி தொண்டு பின்சமூகப் புரட்சி
படித்தவன் படியா மூடன் தத்தையாய்
ஜாதிகள் ஒழிக வென்றும்
jசீர்திருத்தம் வலியுறுத்திக் கிழிப்பார் மேடையிலே
ஜாதியும் ஒழிந்திட வரும்விளைவு என்ன
ஜாதியிலாக் கலாச்சாரச் சீரழிவு தானது
தெரியும் எவர்க்குமிது நடவா தென்றும்
ஆயிர வருடமாய் இருக்கும் ஜாதி
ஜாதித் தொல்லை ஏற்பட தடுத்திடு
ஜாதித் தொல்லையை சட்டத்தால் நீக்கு
ஜாதியை அழிக்கவா சுதந்திரம் பெற்றார்
ஜாதியையின் னொருஜாதி யொழித்து
சாதனை செய்யத் துடிபபது நியாயமா
தடுத்தும் ஜாதிவிட்டு காதலர் மணப்பர்
அன்றும் இன்றும் என்றுமி்து உண்டே
ஜாதி அன்றும் இன்றும் என்றும்
இல்லை யிங்கு ஜாதியின் கொடுமை
இல்லாத் கொடுமை பூதமாக் கிப்பார்த்தார்
தாழ்ந்தோன் தாக்கும் கொடுமையிங்கு நடக்க
யாரும் கணடதில்லை அரசும் காணாதே
தமிழகத் திலநூறாண் டாய்வதைப் பதாராம்
திராவிட னெனப்பொய் பேசும் கன்னடப்
பெரியார் முன்னேற்ற தெலுங்குச் சீடருமே
இவர்வளர்த்த கிருத்துவ முசுலீமும் தமிழரோ