ஜாதிக் கொடுமையாம்

ஜாதிக் கொடுமையாம்:


நேரிசை வெண்பாக்கள்

ஆதவனைக் காணா மறைக்கவாலி சொன்னவார்த்தை
சாதனைக் காகாகை ஆயிரம் -- வேதனை
சோதனைக்கு கண்ணினை மூட வொருகைபோதும்
ஆதவனோ டண்டமுமில் லை

சூரியச் சந்திரன் யானைக் குடம்
பாரில் குறிக்கு மவர்சின்னம் -- வீரிய
சூரியன் தோற்றார் இலைமறைக்கப் பன்முறை
யாரிங்குண் டாம்சிறுத்தை யாய்


ஆதவனைக் அந்தகனும் போற்றான் அறிந்திடு
வேதனை யேதுனக்கு ஆதவர்க்கே -- பாதகம்
சோதனைக்கு வெட்டுண்ட கையா ? உயிர்க்கைத்தான்
பூதங்கா ணாக்கண்மூ டும்


பாட்டைத் தொடுத்துக் கொடுத்ததால் நாட்டையே
வேட்டையாடச் செய்தார் புலவரும் --. வேட்டையாடி
நாட்டினுடை கோட்டை பிடித்தடிதார் கொள்ளைசெய்தார்
தேட்டை மறைத்தொளித் தும்


.....

எழுதியவர் : பழனிராஜன் (2-Dec-20, 8:08 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே