பெண்டாலும் கூட்டமிது

மலத்தை மதுவாக்கி
குடிக்கக் கொடுத்தாலும்
மனதின் நிறைவோடு
மகிழ்ந்து குடித்து
மயங்கும் கூட்டமிது

பிணத்தின் உடற்கறியை
சமைத்து இலையிலிட்டு
யாவரும் ஒன்றுக்கூடி
சுவைத்தே தினந்திண்ணும்
அருள் நிறைந்த கூட்டமிது

பெரியநதி யாவற்றிற்கும்
பெண்களின் பெயரையிட்டு
பெருமையாய் பேசிக்கொண்டு
பெயர்த்தி வயதுப்பெண்ணை
பெண்டாலும் கூட்டமிது

படிக்கும் கல்விக்கு
பலவகையாய் விலையையிட்டு
பட்டங்கள் வழங்கியவாறே
கெட்டுப்போக வழி செய்யும்
பகுத்தறிவு கூட்டமிது

உழைப்பை புறந்தள்ளி
சரக்கை கைமாற்றி
ஆதாய வருமானத்தை
அச்சமின்றி சேர்த்து வைக்க
ஆர்ப்பரிக்கும் கூட்டமிது

மயக்கும் பேச்சுகளால்
மயங்கி மதியிழந்து
மந்தை ஆட்டுக்கூட்டமாக
மறுத்துப்பேச திராணியின்றி
மந்திரியாக்கும் கூட்டமிது

துடிப்பான காலத்திலே
பிடிப்பாக பொருளீட்டா
மிடுக்கான இளைஞரோடே
அணுக்கமாய் அரசியல் பேசும்
அறிவாளிகளின் தேசமிதுவே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Dec-20, 7:12 pm)
பார்வை : 69

மேலே