பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறப்பெடுக்கும் எல்லா உயிருக்கும்
பெருமைக் கொள்ளும் நிலையிருக்கும்
நற்கார்த்திகையில் உலகடைந்தாய்
நாற்திசையாலும் புகழ் கிடைக்கும்
எவ்வளவு இடர்வரினும் துணிந்து நில்
இடர் யாவும் பணிந்து பாதம் தொழும்
பயங்காட்டிய தோல்விகளை படியாய் பார்
படிப்படியாய் பகலவன் ஒத்த அறிவு மிளிரும்
படிப்பின் மீதேறி பாரை வெல்லலாம்
உன்னை உருக்கும் இயலாமைக்கு இடர் செய்
இரும்பைவிட உறுதியான எண்ணம் வரும்
சோதனையில் வெல்லுபவையே உறுதியாய்
சொடுக்கிடும் நேரத்தில் திமிறி எழு
பிறர் எண்ணத்தை அறிய முயலாதே
புறம் பேசுவோரை புரிந்துக் கொள்
எதற்கும் விடை நம் அறிவே கொடுக்கும்
பதற்றைத் தவிர்த்தாலே பாதி வெற்றி
தாமதமின்றி செய்தாலே முக்கால் வெற்றி
டிசம்பர் 7ல் ஒன்றையேனும் பெற உறுதிக்கொள்
மே 30ல் உன்னோடு நீ நினைத்தது இருக்கும்
கோபத்தை உன் மனக்கிணற்றில் மூழ்கவிடு
கோளாறுகள் விலகி கோலோச்சுவாய் தனியாய்
அளப்பறியா இறை அலை உன்னை ஆட்கொள்ளும்
அனைத்து வளமும் உன்னை உயர்த்தும்
இன்றோடு உன் இன்னல் களைய வாழ்த்துக்கள்
இறைவனின் செல்லாமே இனிய பிறந்த நாள் வாழ்த்து
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Dec-20, 7:00 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 272

மேலே