காதல் செய்வோம் வா

அள்ளிக் கொடுத்தால்
தீர்ந்து விடும் என்று தான்
அணைத்து வைத்திருக்கிறேன்
என் நெஞ்சோடு
உனக்கானக் காதலை..

நேற்றைய இரவிலும்
நாளைய விடியலிலும்
உனக்காக நான்
காத்துக் கொண்டிருக்கிறேன்
என் உயிர்க் கொண்ட
உண்மைக் காதலோடு...!

என் கனவுகளில் இருந்து தப்பித்து
எந்தன் கண் முன்னே வா!
காலம் நேரமில்லாம்
காதல் செய்வோம் வா!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 5:54 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : kaadhal seivom vaa
பார்வை : 1113

மேலே