அவளின் கயல்விழி
உன் கயல்விழிகளைக்
கொஞ்சம் கடனாய்க் கொடுத்தால்..
நாளெல்லாம் என் அருகினில்
வைத்து ரசித்துவிட்டு!
கதைகள் சில கதைத்துவிட்டு!
கவிதைகள் பல எழுதிவிட்டு!
உன்னிடம்
திரும்பத் தருகையில்
மொத்த கவிதைகளில் இருந்து
மெல்லமாய் ஒரு ஒத்த
கவிதை ஒன்று எடுத்து
செல்லமாய் ஒரு முத்தமிட்டு
அதை உன் கைகளில்
பரிசாய் தருகிறேன்...!
❤️சேக் உதுமான்❤️