பார்த்துச் செல்லடி
பெண்ணே
பார்த்துச் செல்லடி!
உன் பாதம்
சேதமாகாமல் இருக்க
நீ நடந்து செல்லும் சாலை எங்கும்
என் மனதை எடுத்து விரித்து
பாதையாக்கியுள்ளேன்...
நீ நகர்ந்து சென்றதும்
என் மனதில் பதியும்
உன் பாதச்சுவடுகளை எடுத்து
என் இதய அறையில் மடித்து
பொக்கிஷமாய் பாதுகாப்பேன்!!!
❤️சேக் உதுமான்❤️