என் கண்மணி

என் முகம்
காணும் நேரமெல்லாம்
உன் இதழ் இடுக்கில் இருந்து
சிந்திச் சிதறும் சிறு புன்னகையில்
என் அகம் சிக்கிக்கொண்டு
ஆனந்த அவஸ்தைப்படுகிறது!


உன் கூரிய விழிகள்
என் உள்ளத்தை துளையிட்டு
உயிரினுள் ஊடுருவி
உல்லாசப்படுத்துகிறது!


கண்மணி!
தொலைவில் நின்று
என்னை வதைக்காமல்
என் அருகினில் வந்து
உன் பூவிதழ் கொண்டு
என்னிரு கன்னங்களை
துவைக்கலாமல்லவா?!


வா அன்பே!
என்னை அன்போடு
அணைத்துக் கொள்..


ஆயுள் முடியும் வரை
என் உயிரை
உன் இதயத்தோடு இணைத்து
மனதோடு மறைத்துக் கொள்..


நான் மண்ணில் மாண்ட பின்பு
உன் சிறு புன்னகைக்கு பின்னால்
ஒரு சிறுவன் போல் ஒளிந்திருப்பேன்..!


காதலால்
உன் நெஞ்சம் எங்கும்
நிறைந்திருப்பேன்...


காலத்திற்கும்
உன்னோடு கலந்திருப்பேன்.


கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 5:57 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : en kanmani
பார்வை : 646

மேலே