இனிது இனிது என்றும் இனிது

இனிது இனிது என்றும் இனிது
-----------------
கிள்ளையும் மழலையும் செஙகீரைப் பருவமும்
பாதையின் அழகும் பெதும்பையின் எழிலும்
பெண்மையின் நாணமும் மகளிரும் மஞ்சளும்
மலரும் வண்டுமாய் நேர்கின்ற காதலும்
சேர்ந்த மஞ்சத்தில் தலைவனும் தலைவியும்
கெஞ்சும் கொஞசலில் மலரும் மதுரமும்
மேற்திசை வாடையும் தென்றலின் சுகமும்
ஊடலும் கூடலும் அதனில் இன்பமும்
தேனும் பாலும் தெவிட்டாத நிலையும்
தண்நிறை நெஞ்சமும் மாசற்ற செய்கையும்
ராகமும் தாளமும் இணைந்த கீதமும்
மொழியில் தமிழும் தேன்சுவை சொற்களும்
சொற்களின் நடையில் பா விடும் கவியும்
கவிதையின் அழகும் அதனூடே வெண்பாவும்
" இனிது இனிது என்றும் இனிது "

எழுதியவர் : சக்கரை வாசன் (17-Dec-20, 2:07 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 210

மேலே