சிலருக்கு மட்டும் ரத்தம் பற்பலருக்கு தக்காளி சட்னி

ஒரு கத சொல்லட்டுமா சார்!

சிகரெட் குடிக்கிறது தப்புன்னு போர்டு இருக்கும்
ஆனால்
சிகரெட் விக்கிறது தப்புன்னு போர்டு இருக்கவே இருக்காது

மது அருந்துவது தவறுன்னு போர்டு இருக்கும்
ஆனால்
மதுவை விற்க கூடாதுன்னு போர்டு இருக்கவே இருக்காது

மருத்துவர் பரிந்துரையில் மட்டுமே மருந்து சாப்பிடணும்னு அரசு அறிக்கை இருக்கும்
ஆனால்
ஒரு மருந்து சீட்டு கூட மருந்துக்கடைக்கு வராது.

( அந்த மருந்து அவங்களோட இணைப்பா இருக்குற மருந்து கடையிலே மட்டுமே வச்சிருப்பாங்க )

அப்ப பிரைவேட் மருந்து கடை வச்சுருக்க நாங்க எல்லாம் எப்படி புடுங்குறது .
#சுத்தியல் இல்லாம ஆணியை ......

இப்போ சொல்லுங்க சார் !

மருத்துவர் எழுதுற மருந்து சீட்டுக்கு மட்டும்தா மருந்து கொடுக்கணும்னா மருத்துவமனையோட இணைப்பா பார்மசி எதுக்கு?

மருத்துவர் சீட்டு இல்லாம மருந்து கொடுக்கவே கூடாதுன்னா அப்படியான ஒரு படிப்பு எங்களுக்கு எதுக்கு ?

எழுதியவர் : மன்னை சுரேஷ் (17-Dec-20, 7:39 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 63

சிறந்த கட்டுரைகள்

மேலே