நலம் நலம் அறிய ஆவல்
நல்ல தகவல் நூற்றில் ஒன்று இது. நம்ம மக்கள் காது கொடுத்து எந்த ஒரு நல்ல தகவல்களையும் கேட்க இன்று நேரம் இல்லாதவர்களாய் உள்ளார்கள். அப்படியே நல்ல தகவலைக் கேட்டாலும் எல்லாத்தையும் கேட்டு தங்களை மாற்றிக் கொள்வார்களா என்றால் அதுவும் சாத்தியமில்லை. கெமிக்கல்ஸ் கூட வாழ பழகிட்டாங்க. மெடிக்கலுக்கு காய்ச்சலுக்கு மகனுக்கு மாத்திரை வாங்க வர அம்மா கூட ஒரு கூல்ட்ரிங்க்ஸ் இல்ல சாக்லேட்டையும் சேத்து வாங்கி போறாங்க. அது போல ஜங்க் ஃபுட்ஸ் அப்படின்னு சொல்லுற குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமா கொல்லும் காற்றில் அடைக்கப்பட்ட லேஸ் குர்குரே போன்ற எக்கச்சக்கமான நொறுக்குத் தீனி வகைகள் இன்னைக்கு ஒவ்வொரு கிராமத்துலயும் நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பெட்டிக் கடையில தொங்கவிட்டு விட்டு வித்துகிட்டு இருக்காங்க. உங்க குழந்தை கிட்ட அஞ்சு ரூபாய் காசு கொடுத்தா அது தானா கடைக்கு போயி இந்த மாதிரி விஷத்தை வாங்கி சாப்பிட்டு கிட்டுதான் இந்த நொடி வரைக்கும் இருக்காங்க. குழந்தைகளையே குறிவைத்து தாக்கும் கார்ப்பரேட் காரன் நம்ம நாட்டுக்குள்ள மட்டுமில்லை நம்ம வீட்டுக்குள்ளும் நுழைஞ்சுட்டான். நம்ம சாப்பிடுற அரிசியை பளபளப்பாக்கி எப்ப மூட்டையில் கட்டி விக்க ஆரம்பிச்சானோ அப்பவே நம்ம கெமிக்கல்ஸ்ல விழுந்துட்டோம். இன்னைக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட்ல இருந்து இட்லி மாவு வரைக்கும் ரெடிமேட் பன்னிட்டாங்க. பாலையும் பாக்கெட்ல விக்கிறாங்க. நாப்பது நாள்ல வளர்ந்த பிராய்லர் கோழியும் பிரியாணிக்கு ஃபேமஸ் ஆக்கிட்டாங்க. சமைச்ச சாப்பாட்டை மீந்து போனா அதை அடுத்தநாள் பத்திரப் படுத்தி சாப்பிட ஃப்ரிட்ஜ்ல வைக்கிற வித்தையும் மக்கள் கத்துக்கிட்டாங்க. குடிக்கிற தண்ணீர் மினரல் வாட்டர்ன்னு சொல்லி ஒட்டு மொத்த மினரலையும் வடிகட்டி பாக்கெட்லயும் பாட்டில்லயும் வியாபாரமாக்கிட்டாங்க. சொல்லிக்கிட்டே போகலாம் நிறைய நிறைய. ஆனால் நம்ம மக்கள் குழம்புல போடுற கல் உப்பு அது கரையிற நேரத்தைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாம தூள் உப்புக்கு மாறிட்டாங்க. இந்த அவசரமான உலகத்தை மாத்தனும்னா நாட்டோட சட்டங்கள் மாறனும். ஆனால் அடுத்த தலைமுறையை இயக்கப் போற நம்ம குழந்தைகளை குறி வச்சே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட தயாரிப்பு பொருட்கள் மீது கலப்படத்தை ஆரம்பிச்சுட்டாங்க இன்னும் இன்னும் எக்கச்சக்கமான கலப்படங்கள் காத்துக்கிட்டு இருக்கு. கவர்மெண்ட் கடுமையான சட்டத்தை விதிச்சி இதுபோல குழந்தைகளை குறிவைத்து தாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை முடக்கனும். மேலும் நம்ம மக்கள் அவசியமில்லாத விஷயங்களுக்கு விஞ்ஞானத்தை பயன்படுத்தாம தேவைக்கு உள்ள விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துனா தான் அடுத்தடுத்த தலைமுறைகள் செழிக்கும்.