தங்க மீன்கள்
தங்க மீன்கள்
கூடு விட்டு கூடு பாய்வது
ஞானியருக்கு மட்டும்
சாத்தியமல்ல
எங்குல மங்கள பெண்களுக்கும் தான்
பிறந்த வீட்டில் பட்டாம்பூச்சியென
சிறகடித்து சுதந்திரமாக பறந்த பறவைகள்
புகுந்த வீட்டில் சிறகொடிந்த பறவையாக
குடும்பம் என்ற போர்வைக்குள் முடங்கி போய்
கணவன், பிள்ளைகள்
என்ற பாசபிணைப்பில் பின்னி பிணைந்து
ஒரு வட்டத்துகுள் தன்னை அடக்கி கொண்டு
சுயநலம் மறந்து
சதா குடும்ப நலன் பற்றி
சிந்தனை செய்யும் குடும்ப குத்து விளக்குகள்
அடுபங்கறையில் வாழ்க்கையை தொலைத்த அற்புதங்கள்
குடும்பம் என்ற கோயிலை கட்டி காக்கும்
குலதெய்வங்கள்
கணவன், பிள்ளைகளை நேர்கோட்டில்
பயணிக்க செய்யும் கலங்கரை விளக்கங்கள்
பாசத்தை மழையன பொழியும்
தன்னலம் கருதா தியாக செம்மல்கள்
இந்த அன்பின் வடிவமான குடும்ப தலைவிகள்
யாவரும் மீன் தொட்டி என்னும் குடும்ப சிறையில் சந்தோஷமாக நீந்துவது
போல் தண்ணீரில் கண்ணீர் விடும்
சுயநலமற்ற கால சுமைதாங்கிகள்
கண்ணுக்கு லட்சணமாக தெரியும் மிக அழகான தங்க மீன்கள்.
- பாலு.