நகைச்சுவை துணுக்குகள, 31

ஆண்கள் இரண்டு காரணத்துக்காக குடிக்கிறார்கள்.
ஒன்று: கல்யாணம் ஆகாததால்
இரண்டு: கல்யாணம் ஆனதால்
*********
நம்மோட 25 வது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப்போறோம், டியர்

ஹவாய்க்குப்போகப்போறோம்.

கேக்கறதுக்கே த்ரில்லிங்கா இருக்கு. அப்போ நம்மோட 50 வது கல்யாண நாளுக்கு?

உன்னை ஹவாயிலிருந்து திரும்பக்கூட்டிக்கிட்டு வருவேன்.
********
ஒரு ஆணும் பெண்ணும் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது அந்தப்பெண் அந்த ஆணைப்பார்த்து நீங்கள் என்னைப் பார்த்து ஒவ்வொரு முறையும் சிரிக்கும்போதும் உங்களை என்னுடைய இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அடங்காத ஆசை தோன்றுகிறது”.

அந்த ஆண் மகிழ்ந்து போய் “அப்படியா, நீங்கள் யார்?”என்று கேட்டான்.

“ஆமாம் நான் ஒரு பல் வைத்தியர்” என்றாள் அந்தப்பெண்.
*********
ஏண்டா, கணக்குலே இவ்வளவு கம்மியா மார்க் வாங்கி இருக்கே
அண்ணிக்கு வரல்லே.

அண்ணிக்கு கணக்கு உனக்கு வரல்லியா? என்ன சொல்றே?

என் பக்கத்துலே வழக்கமா உக்காற பையன் வரல்லே. அதான்

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (19-Dec-20, 10:28 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 311

மேலே