நகைச்சுவை துணுக்குகள் 30,
உங்க வீட்டுலே நகை காணாம போச்சுன்னு சொன்னீங்களே. கண்டு பிடிச்சிட்டீங்களா?
கண்டு பிடிச்சிட்டேன்.
அப்படியா? ரொம்ப சந்தோஷம். ஆமாம். எப்படிக் கண்டு பிடிச்சீங்க?
அதுவா. நான் பீரோவைத்திறந்து பாத்தபோது வெச்சிருந்த நகை எதையும் காணோம். அப்பதான் நகை எல்லாம் காணோங்கறதைக் கண்டுபிடிச்சேன்..
*********
இப்ப டிவியிலே பாருங்க சிவாஜி வாரம், எம்.ஜி.ஆர். வாரம், ரஜினி வாரம், கமல்வாரம், வில்லன் வாரம், நகைச்சுவை வாரம்னு கொண்டாடறாங்களே அந்த மாதிரி ஹோட்டல்காரங்களான நாமும் கொண்டாடினா என்னங்க?
எப்படிங்க?
வெண்டைக்கா வாரம், வெள்ளரிக்கா வாரம், பூசணிக்கா வாரம்னு கொண்டாடலாமே. என்ன சொல்றீங்க?
*************
ஒருவன்: என் மனைவி ஒரு தேவதை
மற்றவன்: நீ அதிருஷ்டம் செஞ்சவன். என் மனைவி இன்னும் உயிரோடு இருந்து என் உயிரை எடுக்கிறா.
*************
ஈன்ஸ்டின் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.
அவரிடம் ‘ டிக்கெட்’ என்றார் டிக்கெட் பரிசோதகர்
ஈன்ஸ்டினும் தன் டிக்கட்டைத் தேட ஆரம்பித்தார்,.
சட்டைப்பையில் பார்த்தார் கிடைக்கவில்லை.
பேன்ட் பாக்கெட்டில் பார்த்தார். கிடைக்கவில்லை. தன்பெட்டியைத்துளாவிப்பார்த்தார்.ஊஹூம். கிடைக்கவில்லை.
எங்கே வெச்சேன்னு நினைவில்லையே.
டிக்கட் பரிசோதகர் சொன்னார்: “ஈன்ஸ்டின் அவர்களே. உங்களை எனக்கு நன்றாகத்தெரியும். நீங்கள் டிக்கட் வாங்கி இருப்பீர்கள். மறந்து எங்கேயாவது வைத்து இருப்பீர்கள். கவலைப்பட வேண்டாம்”. என்று அடுத்த பெட்டிக்குக் கிளம்பினார்.
இருந்தாலும் ஈன்ஸ்டடின் தன் டிக்கட்டைத் தேடிக்கொண்டே தான் இருந்தார்.
அந்த டிக்கட் பரிசோதகரோ, “ஈன்ஸ்டின் அவர்களே, நான்தான் சொல்லிவிட்டேனே, பிறகும் நீங்கள் ஏன் டிக்கெட்டைத்தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். கவலையை விடுங்கள்” என்றார்.
அதற்கு ஈன்ஸ்டின் “அந்த டிக்கெட் கிடைத்தால்தான் நான் எங்கே போகிறேன் என்று எனக்குத்தெரியும். அதற்காகத்தான் அதைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.
***********