ஆவின் கவாப்

ஆவின் கவாப்

ஆவின் கறி பால் தயிர் நெய் சேர்ந்த கவாப்

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

பாரத நாட்டுடைப் புனிதம் எங்கே
ஆவி னிளம்கன் றின்மா மிசத்தை
என்பு நீக்கிய தரைக்கிலோ எடுத்தும்
ஆவின் பாலில தைவே கவைத்து
ஆவின் மோரில் அரைமணி நேரம்
ஊற வைத்துப் பின்னெடுத் துமிளகு
மல்லியின் விதைகள் உப்புடன் மிளகாய்
பூண்டுடைத் திரியும் ஈருள் ளியுடன்
இஞ்சிப் பட்டைக் கிராம்பு சேர்த்தரைத்
ததனுடன் பசுநெய் யில்வறுத் தெடுத்த
முந்திரி திராட்சை சேர்த்து மொன்றாய்
நையவே பிசைந்து கம்பிமேல் நீளப்
பூசியே அமுக்கியும் தயாரிப் பார்பல
கரியடுப் பிவ்வலை பரப்பி வாட்டுவர்
பசுநெய் பூசிச் சுற்றுவர்.
பதமாய் செய்துமே படைப்பர் ஒட்டலிலே

....


s

எழுதியவர் : பழனிராஜன் (19-Dec-20, 5:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே