காலமானவர் கவிதை எழுதினால்”
"காலமானவர் கவிதை எழுதினால்”
முடிவின் இருளும்
இனிமேல் காண்பதில்லை
பாதம் தரை மேல்
நடப்பதும் காண்பதில்லை
உற்றார் சுற்றத்தார்
ஒருவரை காண்பதில்லை
சாதியின் மேல் பூச்சு
என்னிடம் படுவதில்லை
கோபம் குரோதம்
இவ்விடம் இருப்பதில்லை
காமம் போகம்
எதுவும் இங்கில்லை
அண்டவெளி ஆகாயம்
எங்கெங்கும் சுற்றிடலாம்
பறப்பதற்கு அனுமதி
யாரிடம் பெறுவதில்லை
இதுவரை இருந்த வாழ்க்கை
இவ்விடம் இருப்பதில்லை
இருந்த வாழ்க்கையின் நினைவுகள்
என்னிடம் இருப்பதில்லை
ஒரு வேளை
சந்ததிகள் என்னை நினைத்து
சமாதிகள் கட்டிடலாம்
மணி மண்டபங்கள் எழுப்பிடலாம்
தயவு செய்து
என் பெயரை மட்டும் எழுதி
வெற்றிடமாய் விட்டு விடுங்கள்
அவ்வுலகத்தில் செய்தது எதுவும்
இங்கு கணக்கில் எடுத்து கொள்வதில்லை