ஹனிமூன்♥️💋♥️💋💕💀
பனிமலையில் பயணிக்க ஆசை
வெள்ளிப்பனி மீது படுத்துறங்க ஆசை
கள்ளி அவளுடன் காதல் செய்ய ஆசை
காஷ்மீர் ஆப்பிளைக் கடித்துத் துப்ப ஆசை
உறையும் குளிரில் உடையற்று இருக்க ஆசை
தந்தி அடிக்கும் அவள் உதடுகளுக்கு உதவிக் கரம் நீட்ட ஆசை
பஞ்சு மெத்தை பனிமலையிலே
அத்தை மகள் பளிங்கு மேனியிலே
காஷ்மீர் ரோஜாக்களைத் தூவி
அழகு ராணி அவளுடன்
கட்டிலில்லா பள்ளி அறை அமைத்து
ஆளில்லா உலகத்தில்
ஆலாபனை பல செய்து
ஆசையில் உச்சம் தோட்டு
வாலிபத்தின் எல்லை அடைந்து
ஆலிங்கனம் செய்ய ஆசை
காமதேவன் கட்டளைக்கு
கட்டுப்பட்டு
இச்சைக்கு உட்பட்டு
இயல்பை மறந்து
இன்ப லோகம் அடைய ஆசை
இடி சத்தம் கேட்டு
அதிர்ந்து போனோம்
ஆரவாரம் பல செய்து
ஆர்ப்பரித்த நாங்கள்
அடங்கிப் போனோம்
முடக்கு வாத நோயாளி போல்
முடங்கிப் போனோம்
துப்பாக்கி ஓசை கேட்டு
துவண்டு போனோம்
குண்டு துளைத்து விடுமோ
குலை நடுங்கிப் பயந்து போனோம்
உயிருக்கு உத்தரவாதம் இல்லா ஊரில்
உல்லாச பயணமா
தேனிலவுக்கு வந்த நாங்கள்
தேக சாந்தி அடையும் முன்னே
தேகம் காக்கப் போராடினோம்
தேசம் காத்த வீரர்கள்
போராடியும்
தீவிரவாத தீயவர்களுக்கு
தீன் பண்டமானோம்
உயிர் போனால் பராயில்லை
மானம் பறிபோன பிறகு
வாழ்ந்து என்ன பயன்
கசங்கிய மலராய் அவள்
கிழிந்த நாராக நான்
குப்பை என எங்களை வீசிவிட்டு
மாயம் ஆன மாபாவிகள்
இன்ப ஆற்றில் மிதந்த நாங்கள்
சில விநாடிக்குள்ளாக
ரத்த ஆற்றில்
அவள் இறந்து விட்டாள்
நானும் இன்னும் நோடிகளில்....
- பாலு.