ஆனந்த அவதி
உன் விழி சொடுக்கிய
என் வரைபடம் காணமுடியவில்லை.
மனத்தினில் சேமித்து வைத்த
உன் குரல்வளம் கேட்கவில்லை.
நினைவெல்லாம் நனைந்த
உன் நாணம் நிலைக்கவில்லை.
இயக்கநிலையில் நாயகனும்
அமைதிநிலையில் நாயகியும்
இன்பமழையில் குளித்திட்டபோழுது
உலகநிலை மறந்திட்டபோழுது,
அமைதிநிலை பழகி மகிழும்
அவதியில் துளிர்க்கும் தெய்வம்.