மகளே

சேய் தாயின் கரம் சேர
கருவில் உதிக்கிறால்...

தாய் சூழ்நிலை என்னும்
சூழ்ச்சியில் சிக்கி தவிக்கிறால்...

விதையாக விதைத்து
விதியால் விடியலற்று போனாய்...

தாய்க்கு கிடைத்த சாபமா
இல்லை
நீ வாங்கி வந்த சாபமா...

யார் பெற்ற சாபம் என்று ஆராய மணம் இல்லை...

மண்ணை தொடும் முன்
மண்ணுலகை விட்டு சென்றாய்....
பூக்காத அந்த வாடாமல்லி...

மண்ணில் இருந்தும் வாடிணால் வாழ மணமின்றி...

வருடங்கள் மாறலாம்
நாட்கள் ஒடிடலாம்
நிமிசங்கள் மேகங்களாய் கலயலாம்...

உன் நினைவு பசுமரத்தாணி போல
என் நெஞ்சோடு கலந்தது..

சிரிப்பு என்னும் முகத்திரையில்
என்னை மறைத்தாலும்
இனி
என் நியாபகத்திற்கு
சிரிப்பு வெகு தூரமே
என்னுள் கருவுற்றவளே
உன் கணவுகளுக்கு நினைவூட்ட தவறினேன்
உன்னை கருவொடு இழந்தேன்.

என்றும் உன் நினைவில்

உன் அம்மா...😢

எழுதியவர் : லாவண்யா (5-Jan-21, 8:58 am)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : magale
பார்வை : 507

மேலே