தாகூராட்டம் பிரதமர்
![](https://eluthu.com/images/loading.gif)
தாகூராட்டம் ஆக நினைக்கிறார் பிரதமர் முடியால்
தாறுமாறாய் கவிதை படித்து தம்மை கூர்த்தீட்டுகிறார்
தமிழை இந்தியை குஜராத்தியை குஷிப்படுத்துகிறார்
ஆய்வு செய்து அனைவரையும் அசத்துகிறார்
கவிதையை தாமே புனைந்து அரங்கேற்றுகிறார்
காத்திருக்கும் எவரையும் காண முயலவில்லை அவரே
கவிதை மேல் காதல் வந்ததால் கம்பராய் மாறினாரோ
கதைகளம் தயார் செய்து அதகளம் செய்யப் போகிறார்
மங்காப் புகழ் சேர்த்த வங்காள மொழி கவிஞன் போல்
வேந்தாய் உள்ளவர் வினோதமாய் தினம் மாறுகிறார்
தானியம் உற்பத்திப்போரை தறுதலையாய் எண்ணி
தரகு தொழிலோருக்கு தங்க கம்பளம் விரிக்கிறார்
உற்பத்திப்போன் மட்டுமே உயிரினத்துக்கு உறுதுணை
ஒப்பனை செய்து விற்போர்கள் நட்டமென ஓடுவர்
ஒரு நாளில் பாரதம் உணவின்றி தத்தளிக்கும்
தரகு செய்தோரெல்லாம் பிழைக்க வேறு நாடு புகுவரே
உரிமைக்காக போராடுபவர் உயிர் காக்க உழைப்பர்
உண்டியலை தினம் பெருக்கி உலகுக்கே கொடுப்பர்
உத்தமனாய் காட்டியவேந்தன் உருக்குலைந்திடுவானே
உள்ளபடி நாடு அன்று உயர் செழிப்பில் இருக்கும்.
----- நன்னாடன்.