உடையின்றி பிறக்கிறான்
உடையின்றி உலகில் பிறக்கிறான்
உடையாலே உலகை பிரிக்கிறான்
உலகத்தில் உயர்ந்தோன் தாமென்றே
உற்பத்தியை ஒருவன் செய்கிறான்
உரிய விலையை ஒருவன் வைக்கிறான்
உரிமையை உற்பத்திப்பவன் இழந்தே
கரையான் கட்டும் புற்றினைப்போல்
கடமையை பல பேர் செய்வதால்
கயவர்கள் பலரும் கடவுளாய் காட்டுகின்றனரே
உருட்டி மிரட்டி விரட்டியுமே
உழைப்போன் உழைப்பை உறிஞ்சியே
உயர்ந்தோராய் ஆளுவோர்கள் பிழைக்கின்றனரே
கண்ணால் காணும் காட்சிப்போல்
கள்ளத்தனமாய் காசினைப் படைத்து வைத்தே
கடி உலகை நெடுந்துயருள் புகுத்தினரே.
----- நன்னாடன்.