உன் ஓரவிழி பார்வையிலே 555

***உன் ஓரவிழி பார்வையிலே 555 ***





ப்ரியமானவளே...




புள்ளி வைத்து நீ
வாசலில் கோலமிட...


பூசணி பூ ஒன்று
நான் பறித்துவர...


எனக்கு
கொடுத்துச்செல் என்றாய்...

இதழ்
முத்தமா என்றேன்...

ஓரப்பார்வையில்
உதடுகள் சுழித்தாய்...

வெட்கத்தில் தலை
கவிழ்ந்தது பூசணிப்பூ...

உன்னருகில் வந்து
நான் கன்னம் கிள்ள...

என் விரல்கள் தாங்கிய
மலர்களை பறித்துக்கொண்டாய்...

உன் எதிர்வீட்டு
வாசல் கதவுதிறக்க...

எட்டு அடியில் என்வீடு
வந்து சேர்ந்தேன்...

இன்று பாசம் கொண்ட
உன் நெஞ்சம் பிரிந்து...

பாலைவனத்தில்
நமக்காக நான்...

பால் குடிக்கும்
நம் மழலையோடு...

நீ பஞ்சு
மெத்தையில்
தவி
க்கிறாய்...



என்
சுவாச காற்றே.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (6-Jan-21, 5:44 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 589

மேலே