மௌனச் சிறை
இதழ்கள் பேச மறுத்து விட்டன
இரண்டு கண்கள் பேசு கின்றன,
உதடு சொலாமல் விட்டதைச் சொல்லிடும்
உந்தன் விழிகள் என்னும் காந்தமே,
கதவைத் திறந்திடு மௌனச் சிறைக்கு
கரந்திடும் உண்மை வரட்டும் வெளியே,
இதயம் இணைந்தபின் வேண்டாம் பூட்டு
இன்பம் காண்போம் வாழ்வில் இணைந்தே...!